பக்கம்:இலக்கியக் கலை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 இலக்கியக் கலை புத்துலகச் சிந்தனை "இலக்கியம் எழுத்துவடிவத்தில் வெளிப்படும் கலை” என்று "இலக்கிய இயல்பு' எனும் நூலாசிரியர் விளக்க முயன்றுள்ளார்.' இந்த வரையறை ஓரளவிற்குத்தான் பொருந்தும். எழுத்தில் எழுதப்படாத வாய்மொழிப் பாடல்களான, வாய்வழிப்பாடல் களான (Oral Literature) நாட்டுப் புறப்பாடல்கள் போன்றவை இந்த வரையறைக்கும் அடங்காமல் போய்விடும். நாட்டினத்தின் மரபுச் செல்வம் இதே எண்ணப்போக்கில், சிற்சில விளக்கங்கள் அறிஞர்களால் தரப்பட்டுள்ளன. "எழுதப்பட்ட படைப்புகளின் ஒட்டுமொத்தமான தொகுப்பே இலக்கியம். அவை குறிப்பிட்ட ஒரு மொழிக்கு அல்லது நாட்டின் (Nation). மக்களுக்கு உரிமையுடைய மரபுவழிச் செல்வமாகப் போற்றிக்காக்கப்பட்டு வருவனவாகும். அவை வடிவாலும் உணர்த்தும் மு ைற யா லும் பெருஞ் சிறப்பு வாய்ந்தனவாக இருக்கும்' என்பது இலக்கியத்திற்குத் தரப் பட்டுள்ளமற்றொரு விளக்கமாகும். இவ்விளக்கத்திலும் "எழுதப்படுதலே' இலக்கியத்தின் தலைமைப் பண்பாகச் சுட்டப்பட்டுள்ளதைக் காணுகின்றோம். இதைத் தவிர, இலக்கியத்தைப் பற்றிய எஞ்சியுள்ள குறிப்புகள் பொருந்துவனவாகத் தோன்றுகின்றன. மொழியின் அழகைப் புலப்படுத்துவது வேறொரு வகையாகவும் இலக்கியத்தை விளக்குவோரும் உண்டு. மொழியை வாயிலாகக் கொண்டு படைக்கப்பெறும் கலையே இலக்கியம். அது வியப்பூட்டும் அற்புத நிகழ்ச்சி போன்ற ஒர் அரிய கலை. ஒரு மனிதன் என்ன நினைக்கிறானோ அதை அழகுற வெளிப்படுத்தும் மொழியாலாகிய கலை" என்பர் ஜி.கே. செஸ்டர்டன் (G.K. Chesterton). இந்த வரையறை ஓரளவிற்கு இலக்கியத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது. இதையே, செறிவு மிக்க வகையில். தனிமனிதன் ஒருவன், ஒரு மொழியைக் குறிப்பிட்ட ஒருவகையில் பயன்படுத்தும் பாங்கினால் அமைவதே இலக்கியக் கலை எனக் கூறலாம். - . வாழ்க்கையின் பிழம்பு . . இலக்கியத் திறனாய்வுக் கலையில், இந்நூற்றாண்டில் முன்னோடியாக விளங்கும் ஹட்சன் Hudson) இலக்கியம்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/30&oldid=751124" இலிருந்து மீள்விக்கப்பட்டது