பக்கம்:இலக்கியக் கலை.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகமும் புறமும் 281 போராட்டம், அப்போரின் காரணம், அதன் விளைவு ஆகிய அனைத்தும் சில வரிகளில் இப்பாடலில் பேசப்படுதலைக் காணல்ாம். ..................அலங்குளைப் புரவி ஐவரொடு சினை.இ. நிலம் தலைக்கொண்ட பொலம்பூந் தும்பை, ஈர்ஐம்பதின்மரும் பொருது களத்து ஒழிய என்ற அடிகள் மேற்கூறிய அனைத்துப் பொருளையும் கூறல் காண்க. கிளத்தற்பாடல் இவற்றை அடுத்து ஆராயப்பட வேண்டிய பிரிவு "கிளத்தல் பாடல் என்பதாகும். இப்பிரிவு அகப்பாடலுக்கும், காப்பியப் பாடலுக்கும் இடைப்பட்டதாக உளது. கூடுமானவரை உள்ளனவற்றை உள்ளவாறே கூறும் முறையை அடிப்படையாகக் கொண்டு தோன்றியதேயாகும். இம்முறை நாம் காணும் இவ்வுலகில் நம்மோடு ஒருங்கு இருந்து பழகும் மக்களையும் அவர்கள் வாழ்க்கை, குறிக்கோள். முதலியவற்றையும்பற்றிக் கூறுவதும், ஒரளவு கற்பனை கலந்து அவற்றைக் கூறுவதும் இவ்வகைப் பாடல் செய்யும் வேலையாம். "நீயே, அமர்காணின் அமர்கடந்து அவர் படைவிலக்கி எதிர் கிற்றலின் வாஅள் வாய்த்த ഖരഖ് யாக்கையொடு கேள்விக்கு இனியை, கட்கு இன்னாயே! அவரே நிற்காணின்புறங்கொடுத்தலின் ஊறுஅறியா மெய்யாக் கையொடு கண்ணுக்கு இனியர் செவிக்கு இன்னாரே! - அதனால் யுேம் ஒன்று இனியை அவரும் ஒன்று இனியர் ஒவ்வா யாவுள' மற்றே, வெல்போர்க் கழல்புனை திருந்தடிக் கடுமான் கிள்ளி! நின்னை வியக்கும் இவ்வுலகம் அஃது என்னோ பெரும உரைத்திசின் எமக்கே -புறம் 167 ஏனாதி திருக்கிள்ளி என்பவன் ஒர் அரசன். அவன் ஸ்ப்பொழுதும் போர் செய்தமையின் அவன் உடல் முழுவதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/300&oldid=751125" இலிருந்து மீள்விக்கப்பட்டது