பக்கம்:இலக்கியக் கலை.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகமும் புற்மும் - $83. கையும் ஒருசேரப் பாடப்பெறுகிற இடமாகும் இவ்வகைப் பாடல்கள். ----. புறப்பாடல் மறைவு : பன்னிரண்டம் நூற் றாண்டின் பின்னர்த் தமிழில் தோன்றிய இலக்கியங்களுக்கு இவ்வகைப் பிரிவினைசெய்து பார்ப்பது இயலாத காரியம். தமிழ்ப்பாடல்கள் புதிய புதிய முறைகளை மேற்கொள்ளலாயின சிறுசிறு புதிய பிரபந்தங்கள் தோன்றிச் செழித்தன. அவை தொண்ணுாற்றாறு வகைப்படும் என்று கணக்கிடப் பெற்றிருப்பினும் அவை யாவும் இன்றில்லை. மேலும் புறம். அகம் என்று கூறப்பெறும் பிரிவினை செய்வதற்குரிய இயல்பு ஒன்றையும் அவை பெற்றுத் திகழ்வில்லை. கலம்பகம், பிள்ளைத்தமிழ் கோவை, உலா எனப்படும் இவை ஒரு வகையாக நோக்குமிடத்து அகப்பாடல் என்றும், பிறிதொரு வகையாக நோக்குமிடத்துப் புறப்பாடல் என்றும் கூறக்கூடியனவாக அமைந்துள்ளன. பிரிவினையின் குறைபாடு : இதுகாறும் கூறியவற்றிலிருந்து தமிழ்மொழியளவில் கவிதை தோன்றி வள்ர்ந்த வகையை அறிந்து கொள்ளலாமேயன்றி வேறு பயன் ஒன்றும் கருதுவதற்கு இல்லை. மேலும் இப்பிரிவின்ைகள் அனைத்தும் நாம் ஆராய்வதற்குச் செளகரியமாகச் செய்து கொள்ளப் பெற்றனவே அன்றி. இயற்கையிலேயே அமைந்து கிடப்பவை அல்ல. மேலும் இப்பிரிவினைப் பெய்ர்க்ளின் பக்கத்தில் த்ரப்பெற்றிருக்கும் ஆங்கிலப்பெயர்கள் தமிழ்ப்பிரிவினையை விளங்கிக்கொள்ளப் பயன்படவேண்டும்ே தவிர, அவை இரண்டும் ஒன்று என்று கருதி யாரும் இடர்ப்பட் வேண்டுவதின்று. நாளடைவில் மேல்நாட்டாரும் இப்பிரிவினை பயனற்றது என்று கருதிக் கைவிட்டு விட்டனர். காரணம், கவிதையில் கவிஞன் ஊடாடாமல் பாட இயலாது என்பதுதான். நற்றிணை, அகநானூறு போன்ற அக்ப்பர்டல்களைக்கூறும் நூல்களிற்கூட அரசர் வரலாறு பழக்க வழக்கங்கள் முதலிய புறச்செய்தி பேசப்படுகின்றன எனக் காண்கிறோம். நாம் நின்ைப்பது போல் கவிஞன் பின்னணியில் நின்று தன் கருத்தையும் உள்ளத்தையும் வெளியிடாமல் ஒன்றைப்பற்றிப் பாடுதல் இயலாது என்ப்தை வரவர நாம் அறிகிறோம். அவ்வாறு பாடின்ால்தான் அதைப் புறப்பாடல் என்று கூறலாம். அவ்வாறு பாட இயலாது என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/302&oldid=751127" இலிருந்து மீள்விக்கப்பட்டது