பக்கம்:இலக்கியக் கலை.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்: 23 வாழ்க்கை இலக்கியம், இலக்கணம் பொருளதிகாரச் சிறப்பு உயர் தனிச் செம்மொழியாகிய தமிழ்மொழியில் எப் பொழுது இலக்கியங்கள் முகிழ்த்தன என அறுதியிட்டுக் கூறுவதற்கு ஏற்ற கருவிகள் இன்று இல்லை, என்றாலும் தொல்காப்பியம் என்ற ஒப்பற்ற இலக்கணம் கிறிஸ்துநாதர் தோன்றுவதற்குப் பல நூற்றாண்டுகள் முன்னரே தோன்றிற்று என்பதை அறிவோம். அத்தகைய இலக்கணம் தோன் ற வேண்டும்ாயின் அதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இலக்கியம் தோன்றிச் செழித்திருக்க வேண்டும். அவ்வித இலக்கிய அடிப்படை இல்லாவிட்டால் இலக்கணம் தோன்றி யிருக்க இயலாது. வெறும் எழுத்திலக்கணத்தையும் சொல் விலக்கணத்தையும் மட்டும் தொல்காப்பியனார் இயற்றியிருந்தால் சிறந்த இலக்கிய அடிப்படை அதற்கு முன்னர் இருந்திருக்கத் தேவை இல்லை. உலகத்திலுள்ள சிறந்த மொழிகளின் இலக்கணம் அனைத்திலும் மேற்கூறிய இலக்கணப் பகுதி இரண்டு மட்டுமே இலங்கக் காண்கிறோம். சில மொழிகளில் கவிதை இலக்கணமும் உடன் தோன்றினது உண்டு. ஆனால் தொல்காப்பியர் வகுத்துள்ள பொருளதிகாரத்துக்கு ஒப்பான இலக்கணம் எங்கும் இல்லை. இப்பொருளதிகாரம் வெறும் மொழிக்கும், மொழியாகிய இலக் கியத்திற்கும்.மட்டும் இலக்கணம் வகுக்கவில்லை: அம்மொழிய்ைப் பேசும் மக்களுக்கும், அவர்கள் வாழ்க்கை முறைக்குங்கூட இலக்கணம் வகுத்தது. இதனால் தொல்காப்பியப் பொருளதி காரத்தை ஒரு சமுதாய நூல் என்றுகூடக் கூறலாம். - பொருளிலக்கண்ப் பய்ன் அவ்விலக்கணம், தன்னால் பேசப்படும். இவக்கியத்தையும், அதற்கு அடிப்படையான மக்கள் வாழ்க்கையையும் இரு பெரும் பிரிவுகள்ாக வகுத்தது. நன்கு ஆராய்ந்து அந்த இரு பிரிவு பகளுக்கும்.அகம் என்றும் புறம் என்றும் ப்ேiரிட்டது. அவை:ஆள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/304&oldid=751129" இலிருந்து மீள்விக்கப்பட்டது