பக்கம்:இலக்கியக் கலை.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# "R வாழ்க்கை, இலக்கியம், இலக்கணம் 287 இரு பிரிவினுள் அடங்குவதைக் கண்டது. இப் பிரிவினை பற்றிச் சற்றுப் பார்ப்ப்ோம். மனிதன் விலங்கு உணர்ச்சியி, லிருந்து வேறுபடாமல் வாழ்கிற காலத்தில் அவன் வாழ்க்கையில் பிரிவினை ஒன்றும் இல்லை. கற்கால மனிதன் அங்ங்னமே வாழ்ந்தான் என்று நினைக்க வேண்டியிருக்கிறது. பசி எடுத்த பொழுது வேட்டையாடி விலங்குகளைக் கொன்று தின்ற காலம் அது. இது குறிஞ்சி வாழ்க்கையின்பாற்படும். குடும்பமோ மனைவி மக்களோ அவனுக்கென்று தனி உரிமையுடன் அமையாத காலம். பின்னர் வேட்டைக்கு உதவியான விவங்கினங்களைப் பிடித்துப் பழக்கி வளர்த்த முல்லைக் காலம் வந்தது. ஆடு மாடுகளைப் பழக்கித் தனக்கு உத வி யாக வைத்திருந்த அக்காலத்தும் அவன் நிலைத்த வாழ்வு நடத்தினான் என்று கூறுவதற்கில்லை. இதனுடன் கூடவே வளர்ந்திருத்தல் வேண்டும் நெய்தல் வாழ்க்கை, நிலவேட்டைக்குப் பதில் கடல் வேட்டை அங்கே சிறப்புற்றிருந்ததாக அறிகிறோம். இறுதியாக மருதநிலை வாழ்க்கை தோன்றியிருக்க வேண்டும். நாடோடி யாகவும், தனி மனிதனாகவும் வாழ்த்தி ஆதி மனிதன், தனக்கென ஒரு குடும்பம் ஏற்படுத்தி ஓரிடத்தே நிலைபெற்று வாழ முற்பட்டமையே மருத வாழ்க்கையாகும். இவ் வாழ்க்கையில்தான் முதல்முதலாகச் சமுதாய வாழ்க்கை. ஆரம்பமாகிறது. மனைவி மக்கள் தனி மனிதன் உடைமையென்ற நினைவு தோன்றியது. இவர்கள் உடைமையாகக் கருதப்பட்டமையின் வாழ்க்கையில் பிணிப்பு அதிகமாயிற்று. ஒருவருடைய வாழ்க்கையில் மற்றவர் தலையிடும் உரிமையும் பெற்றனர். தவறு தேர்ந்த வழி, ஒருவரை ஒருவர் கண்டிக்கவும், வருத்தம் கொள்ளவும் தொடங் கினர், இதனாலேயே ஊடல் என்பது மருதத் திணைக்கு உரிமையுடையதாயிற்று. குடும்பம் உடைமைப் பொருளாக மாறியவுடன் நாளைக்கு வேண்டும் என்ற எண்ணமும், அதற்கெனப் பொருளைச் சேர்த்து வைக்கிற பழக்கங்களும் அப்பொழுதுதான் தோன்றலாயின. சுருங்கக் கூறுமிடத்தில் பொருளாதார நினைவு மருதத்தினை வாழ்க்கையில்தான் முதல்முதலில் தோன்றியது. . . இலக்கியப் பிரிவினை பட்டான். ஒன்று தன் பொருட்டாகவும், தன் குடும்பப் பொருட்டாகவும் வாழும் அக்வாழ்க்கை. ஏன்ையது, பிறர் ப்ொருட்டாக வாழும் புறவாழ்க்கை. இவை இரண்டையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/306&oldid=751131" இலிருந்து மீள்விக்கப்பட்டது