பக்கம்:இலக்கியக் கலை.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை, இலக்கியம், இலக்கணம் 289 விளைவு காதல்; பின்னையதன் விளைவு வீரம். வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட தமிழ் இலக்கியத்தில் இவை இரண்டும் மிகுதியும் இடம்பெற்றன என்றால் அதில் தவறு யாது? குறிக்கோள் நிலை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தோன்றிய அவ்விலக்கியம் ஒரு "குறிக்கோள் தன்மையை அடைய முற்பட்டு அதில் வெற்றியும் அடைந்தது. முற்கூறிய இரு பிரிவுகளும் செம்மையாக அமைந்தால் அவை எங்ங்ணம் இருக்கவேண்டும் என்பதையும் கூறும் நிலை வந்தது. தவறினவர்களைத் திருத்தவும் முற்பட்டது. கலையளவில் நின்று இன்பம் ஊட்டல் ஒன்றையே அடிப்படையாகக் கொள்ளாமல், திருத்துதலையும் தன் கடமை யாகக் கொண்டது தமிழ் இலக்கியம். எனவே, இவை இரண்டை யும் செய்யும் இலக்கியக் கலை, நல்லதொரு வகுப்பை வகுத்துக் கொண்டது. {@@ மனிதன் வெளியில் வாழும் வாழ்க்கை பலரறிய வாழ்வதாகும். அவன் செய்யும் தவறும் நன்மையும் பலர் அறியக் கூடியனவாக இருக்கும். பலர் அறிந்த ஒன்றை அவனுடைய பெயரோடு சேர்த்துக் கூறுவதால் இழுக்கு ஒன்றும் இல்லை. அதனால் புறத்திணை இலக்கியங்கள் தலைவன் பெயர், ஊர் முதலியவற்றை வெளிப்படையாகவும், குறிப்பாகவும் குறித்து, அவனுடைய செயல்களைக் கூறின. - ஆனால் அகவாழ்க்கை அங்ங்னம் அன்று. பிறர் அறிய வாழ்வதன்று அவ்வாழ்க்கை. அகவாழ்க்கையில் ஒருவனும் ஒருத்தியும் சிறப்புடன் வாழ்ந்தாலும், சிறப்பின்றி வாழ்ந்தாலும் அது பிறர் அறியும் தகைமையுடையதன்று. ஆதலின் அகவாழ்க்கை பற்றிக் கூறும் இலக்கியங்கள் தலைவன் தலைவியர் பெயரை வெளிப்படையாகவேனும், குறிப்பாகவேனுங்கூடக் குறிப்பதில்லை. இல்வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும்போது, ஏதேனும் தவறு நேர்ந்தால் துன்பம் ஏற்படும். ஆனால் அத்துன்பத்தைக் காட்டிலும் அத்தவற்றைப் பிறர் அறிவது பெருந்தீங்கை விளைக்கும். இதனால்தான் அறிவும் அநுபவமும் உடைய தமிழன் தன் இலக்கியத்தில் அகப்பகுதியைப்பற்றிக் கூறுகையில் எக்காரணம் கொண்டும் பெயர், ஊர் முதலியன வரலாகாது எனத் தடுத்து விட்டான். அகப்பகுதி இலக்கியங்களில் பெயர், ஊர் கூறலாகாது எனத் தடுத்தது தமிழனது சிறந்த பண்பட்ட நிலையைக் குறிக்கிறது. இ.-19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/308&oldid=751133" இலிருந்து மீள்விக்கப்பட்டது