பக்கம்:இலக்கியக் கலை.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை, இலக்கியம், இலக்கணம் 291 அடுத்துவரும் புறத்திணைப் பகுதி குடும்பத்தைப்பற்றி அறிந்த ஒருவனுக்கு உலகத்தைப்பற்றி அறிவுறுத்த முற்படுகிறது. வாழ்க்கையில் ஈடுபடாமல் இருக்கிறவனுக்கு உலகைப்பற்றி அறிய வேண்டியது இல்லை. ஆனால் இல்வாழ்க்கையில் நுழைந்தவுடன் ஏனைய மக்களோடு நெருங்கிப் பழக நேரிடும். அப்பொழுது தனிமனிதன் தன் வாழ்க்கை முறையைச் சமுதாயத்திற்கு ஏற்றபடி மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். தன்னலம் ஒன்றையே பெரிதாக நினைப்பவன் சமுதாயத்தில் நன்கு கலந்து வாழ முடியாது. தன்னலத்தை ஒரளவு களையவேண்டும். களைதற்குரிய வழி யாது? அன்பு ஒன்றே தன்னலத்தைப் போக்கும். அன்பு வளர்ந்தால் சமுதாயத்தில் ஒருவன் சிறந்த உறுப்பர்க இருத்தல் கூடும். அன்பு எப்படி வளரும் அன்பு வளர அடிப்படையாக இருப்பது காதலே. அன்பாகிய காதலின் தோற்றம் அகத்திணை இயலுள் கூறப்படுகிறது. அதனை நன்கு அறிந்த பின்னரே உலகை நன்கு அறிய இயலும். அன்பால் நிறைந்த ஒருவன் உலகைக் காணும் நிலையே வேறு. உலகில் உள்ள பல்வேறு மக்களும் செய்கின்ற செயல்களையும் அச்செயல்களுக்கு அடிப்படையாண் கருத்துக்களையும் காணும் ஒருவன், அவற்றை நடுநிலை பிறழாது உணரவேண்டும். அங்ங்னம் உணர வழி எதுவென்றால் கருணையோடு பிறர் செயலைக் காண்பதேயாகும். உலகை நன்கு அறிய ஒருவனுக்கு அடிகோலுவது அகம் ஆதலின், அகத்தின் பின்னரே புறம் பேசப்படுகிறது. இக்கருத்தை வலியுறுத்து வதற்காகவே ஆசிரியர் புறத்திணை இயலின் தொடக்க்த்தில், 'அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோர், புறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின்' என்று கூறுகிறார். - இந்த நிலை மனிதன் வாழ்வில் ஈடுபடாத காலம். அகவாழ்க்கைக்கு இன்றியமையாத பொருள்தேடல் முதலிய வற்றில் ஈடுபட்டுள்ளவன் உலகிடை வாழப் புகுந்தால், நட்பு, பகை முதலியன தோன்றியே திரும். ஒவ்வொரு சந்தர்ப்பத் திலும், ஒருவன் நடந்துகொள்ள வேண்டிய தன்மை புறத்திணையியலில் விரிவாக க் கூறப்படுகிறது. உலக வாழ்க்கை முழுவதும் ஒரு பெரும் போராகும். வாழுதற்குரிய வன் மயற்றவர் அந்தப் போரில் மடிந்தே திருவர். எவ்வளவு வெறுப்புடன் இவ் உண்மையை நாம் ஒதுக்கித் தள்ளினும், உலகில் நிலைபெற்றுவிட்ட ஒரு சட்டமாகும் இது. இதனை நன்குணர்ந்த தமிழன் வாழ்க்கைப்போருக்குத் தன்னைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/310&oldid=751136" இலிருந்து மீள்விக்கப்பட்டது