பக்கம்:இலக்கியக் கலை.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 இலக்கியக் கலை தலைவியின் அதிகாரத்திற்குத் தலைவன் கட்டுப்பட்டே நடக் கிறான். இவ்விடத்தில் அவளது உயர்வை ஏற்றுக்கொள்வதில் இழுக்கொன்றும் இல்லை அந்த நிலையில் அவள் ஏதாவது கூறினும் அதனைத் தவறாக எடுத்துக் கொள்ளலாகாது எனப் பொருளியலில் ஆசிரியர் குறிக்கிறார். 'மனைவி உயர்வும் கிழவன் பணிவும் நினையுங் காலைப் புலவியுள் உரிய. இச் சூத்திரத்தால். செயலைப்பற்றி ஆராயாமல் அச்செயலின் அப்பாலுள்ள கருத்தை நோக்க வேண்டும் என்று புலப்படுத்துகிறார். பொருளியலுக்கு அடுத்தபடியாக வருவது மெய்ப்பாட்யல், மன்த் தத்துவத்தை நன்கு தெரிவிக்கும் பகுதி மெய்ப்பாட்டியலாகும் ஆர அமர வாழ்க்கையில் ஈடுபட்ட பிறகே மனத்தத்துவத்தை நன்கு அநுபவிக்க இயலும். களவில் தொடங்கி இறுதிநாள் வரையும் உள்ள மனத்தத்துவத்தை நன்கு விவரிக்கிறது. மெய்ப் பாட்டியல். உடனடியாக எல்லா மக்களுக்கும் இயற்கையாகத் தோன்றும் உணர்ச்சிகளைப் பற்றியும் ஆராய்கிறது அவ்வியல். சில சம்யங்களில் விரும்பத்தகாத செயல்கள் தலைவியினிடமும் காணப்படுமாயின் அச்செயலை ஆராய்ந்து இன்ன மனநிலையால் எய்தியது ஆகலின் இதன்கண் தவறில்லை என்றும் எடுத்துக் காட்டுவது மெய்ப்பாட்டியலே. அன்றியும் மெய்ப்பாட்டியல் நாடகத்தில் பாத்திரங்கள் காட்டவேண்டிய பாவங்களையும் அப் பாவங்கள் தோன்றக் காரணமான சுவைகளையும் விரித்துரைக் கின்றது. அடுத்துத் தோன்றும் உவம் இயல், வாழ்க்கையையே அடிப் படையாகக் கொண்டு தோன்றியது. பெரும்பாலும் உவமை செய்யுளில் வருமேனும் வாழ்க்கையிலும் அது இடம் பெறுகிறது. உவமை பேசுகின்ற இயல்பு யாவர்க்கும் உண்டு ஏனைய இலக்கணங் போல வெறும்மொழிக்கு மாத்திரம் இலக்கணம் எழுதி இருப்பாரேல் தொல்காப்பியனாரும் பல அணிகள் கூறி இருப்பர். ஆனால் வாழ்க் கையில் ஒன்றியது இவ்வொரே அணியாகவின் இதற்கு மட்டும் ஒர் இயல் கூறி அதனுடன் நிறுத்துகிறார். இவ்வியலில் பல இடங். களிலும் தலைவன் தலைவி தோழி முதலியோர் எங்கெங்கு, எவ்வாறு உவமம் பேசுவர் என்றும் கறிக்கிறார். அடுத்துள்ளது. செய்யுளியலாகும். வாழ்கையில் நன்கு பண்பட்ட பிறகே செய்யுளை மனிதன் அநுபவிக்கவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/313&oldid=751139" இலிருந்து மீள்விக்கப்பட்டது