பக்கம்:இலக்கியக் கலை.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை பிறந்த கதை £97. தோன்றி இருத்தற்கில்லை. சமுதாய வாழ்க்கை ஏற்பட்ட பின்னரே கவிதை தோன்றியிருத்தல் வேண்டும். கவிதையைப் பற்றிய சிறந்த ஆராய்ச்சிகள் நடைபெறும் மேல் நாட்டில்கூட இதுபற்றிய முடிவு ஒன்றும் கூறப்பெறவில்லை. கவிதை தனிப் பட்ட மனிதனாலேயே முதல்முதலில் இயற்றப்பெற்றதென்றும், இல்லை, கூட்டமாகக் கூடியே முதலில் செய்யப்பெற்றதென்றும் கூறும் இரு பிரிவுகள் உண்டு. இவ்விரு சாராரும் தங்கள் கட்சி கள்ை நிலைநிறுத்த வேண்டிய சான்றுகளை மட்டும் காட்டுகின்றனர். என்றாலும் பேராசிரியர் எப்.பி. கும்மரே என்பார் நtட்டுப் பாடலும் சமுதாயப் பாடலும், என்ற தம் நூலில் சமுதாயம்ே முதலில் கவிதை செய்தது என்று கூறுகிறார் . இக்கருத்தை மறுப்போர் பலராயினும், தமிழ் மொழியளவில் இம்முடியே சிறந்தது என நினைக்க வேண்டி உளது, சமுதாயமே கவிதை செய்தது என்றால் பொருள் என்ன? பலர் கூடிக் கவிதை புனைந்தனர் என்பதே பொருளாகும். பலரும் கூடிய இடத்தில் ஒவ்வொருவரும், உள்ளிருக்கும் மகிழ்ச்சி தூண்டத் தம்முட்ைய மகிழ்ச்சியை வெளிக்காட்டச் செய்த முயற்சிகள் பாடல்களாகப் பரிணமித்திருக்க வேண்டும். அவர்களுடைய மகிழ்ச்சி, பாடலாக வும் ஆடலாகவும் வெளிப்பட்டிருத்தல் வேண்டும், மன உண்ர்ச்சியை வெளியிட இவை இரண்டும், தக்க கருவிகள் என்பது இன்றும் காணக்கூடியதே. குழந்தைகள் ஆதிமனிதனின் அறிவு வளர்ச்சியைக் காட்டும் கருவிகள். குழத்தைகள் மகிழ்ச்சி, துக்கம் முதலிய உணிச்சிகளை வெளியிட என்ன சாதனங்களைக் கையாளுகிறார்கள்? அதிக மகிழ்ச்சி அடைந்த பொழுது ஆடுவதும் குதிப்பதும், அர்த்தமற்ற பாடல்களைப் பாடுவதும், அவ்வாறே துக்கம், மிகுந்த நேரத்தில் கீழே விழுந்து புரள்வதும் அழுவதும் அவர்கள் செய்யும் காரியங்களாம். இத்தகைய செயல்கள்ே அறிவு வள்ர்ந்த காலத்தும் மனிதன் பாடுவதற்கும் ஆடுவதற்கும் அடிப்படையாக அமைகின்றன குரவைப் பாடல்கள் இவ்வாறு கூட்டத்தில் பிறக்கும் கவிதைகளுக்கு. நம்முடைய குரவைக் கூத்துப் பாடல்கள் சிறந்த உதாரணங்களாக அம்ைகின்றன. சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவை, என்று ஒரு பகுதி காணப்படுகிறது. அதில் ஏழு சிறுமிகள் வட்டமாக நின்றிருக்க, இடையே ஒருத்தி நின்று அவர்களைப் பாடுமாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/317&oldid=751143" இலிருந்து மீள்விக்கப்பட்டது