பக்கம்:இலக்கியக் கலை.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை பிறந்த கதை 301 புறப்பாடல் காப்பியப் பாடலாக முகிழ்த்தமையும் அகமும் புறமும் என்ற கட்டுரையில் பேசப்பெற்றன. கூத்தும் பாட்டும் கூத்துக்களும் இதனோடு உடன் தோன்றி வளர்ந்தனவே யாகும். நூற்றுக்கணக்கான கூத்துக்களின் பெயர்களை மட்டும் இன்று நாம் அறியமுடிகிறது. இவற்றுள் பல இன்ன இன்ன உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு <鹦-- வேண்டியன என்று குறிக்கப்பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள நால்வகை நிலத்தின் கண்ணும் தனித்தனியே இவை தோன்றி வளரலாயின. முல்லை, குறிஞ்சி, மருதம் என்ற நிலங்கட்கு முறையே முல்லைப்பண், குறிஞ்சிப்பண், மருதப்பண் என்றும். அவற்றிற்கு ஏற்ற பறைகளும் இருந்தமை அறியக்கிடக்கிறது. எனவே ஒவ்வொரு நிலத்திலும் வாழ்ந்த மக்கள் சமுதாயப் பாடல்கள், அவற்றிற்கேற்ற பறைகள், அவற்றிற்கேற்ற கூத்து முதலியவற்றைப் பெற்றிருந்தனர் என்று நினைக்வேண்டி உளது. சமுதாய மக்கள் பலரும் கூடிய இடத்து இத்தகைய கூத்து நிகழ்ந்தது என்பதை அடியார்க்கு நல்லார் உரைப் பகுதியிலிருந்து அறிய முடிகிறது. காமமும் வென்றியும் பொருளாகக் குரவைச் செய்யுள் பாட்டாக, எழுவரேனும், எண்மரேனும், ஒன்பதின்ம ரெனும் கைபிணைந்தாடுவது குரவை எனப்படும் இதனால். பாடல் முதலியன சமுதாய மூலமாகத் தோன்றியது போலவே இக்கூத்தும் தோன்றியிருத்தல் வேண்டும் என்று அறிகிறோம். இதனை அடுத்து ஆடுவோர் எண்ணிக்கை குறைந்து ஒருவரோ இருவரோ நின்று ஆடிய நிலையும், அவ்வாட்ட்ங்களுக்கு זעי;x ஏற்பப் பாடல் புனையப்பட்டமையும் அறியக் கிடக்கின்றன." கலைநிலைக் கூத்து இங்ங்னம் சமுதாயத்தில் தொடங்கி மகிழ்ச்சியை வெளியிடும் கருவியாக நின்ற கூத்து மிகச் சிறந்த 5ఘ5)3) நிலையைப் பிற்காலத்தில் அடைந்தது. பாடல் கவிதை நிலையை அடைந்தது போலவே, இக்கூத்தும் நோட்டிய நிலையை அடைந்திருக்கவேண்டும். - - - இந்நிலையில் ஒருவனோ, ஒருத்தியோ அரங்கில் பாவங் களை வெளியிட்டு நாட்டியமாடும் சிறந்த கலை முகிழ்த்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/321&oldid=751148" இலிருந்து மீள்விக்கப்பட்டது