பக்கம்:இலக்கியக் கலை.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

303 இலக்கியக் கலை திருத்தல் வேண்டும். இதன்கண் 'அவிநயக்கூத்து என்பது கதை தழுவாது பாட்டினது பொருளுக்குக் கைகாட்டி, வல்லபஞ் செய்யும் பலவகைக் கூத்து' என்ற ஒன்று அறிதற். பாலது. சிறந்த தனிப்பட்டவர் பாடல்’ தோன்றிய பின்னரே இத்தகைய கூத்தும் தோன்றியிருத்தல் கூடும். அடிப்படைக் காரணம் இங்ங்னம், தோன்றிய பாடல்கள் தனிப்பட்ட மக்களால் தோன்றினும், அன்றிச் சமுதாயப் பாடலாகத் தோன்றினும், இவை தோன்ற என்ன காரணம் என்று ஆய்தல் வேண்டும். மனித மனத்தின் அடிப்படையில் ஒர் இயல்பு இருக்கிறது. குழந்தை முதல் முதியோர்வரை காணப்படும் இவ்வியல்பை ஒரளவு மனிதனுக்கு அடுத்த கீழ்ப்படியில் உள்ள குரங்கு களிடமும் காண்கிறோம், இவ்வியல்பையே போலச் செய்யும்' இயல்பு என அரிஸ்டாடில் என்ற பெரியார் கூறினார். மற்றை யோரையோ, இயற்கையையோ கண்டு அதுபோலச் செய்! யவும், வாழவும் மனிதன் முனைந்திருக்கிறான். ஆதி மனித ளிைடம் காணப்பெற்ற இவ்வியல்பு இன்றும் மனித இனத்தில்) இருக்கத்தான் இருக்கிறது. இவ்வியல்பின் பெயரை வைத்துக் கொண்டு மனிதனிடம் உள்ள நகல் செய்யும் தன்மை, தான் போலும் இது என்று யாரும் முடிவு செய்து விடுதல் கூடாது. அரிஸ்டாடில் இச்சொல்லை மிகப் பரந்து பட்ட பொரு வளி ல் பயன்படுத்தியுள்ளார். மனிதன் கலைஞனர்வது இவ்வியல்பினாலேயே என்று அவர் முடிவு கூறுகிறார். எனவே, ஆதி மனிதனிடம் பாடல் பிறக்க உதவியதும் இப்பண்பாகவே இருத்தல் வேண்டும், இக்கூத்தும் பாடலும் ஒன்றுக்கு ஒன்று பெரிதும் தொடர்: புடையனவாகவின், இவை சேர்ந்தே பிறந்திருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். முதலில் தோன்றிய பாடல்கள். இக்கூத்துக்களிலும் சமுதாயக் கூட்டங்களிலுமே தோன்றியிருத்தல் கூடும். ஒழுங்கு முறைக்கு உட்பட்ட ஆட்டங்களில் இழும் இருக்கக் காண்கிறோம். மகிழ்ச்சியோடு) கூடி ஆடும் கூத்துக்களில் அவர்கள் மகிழ்ச்சியை வெளியிடக்க் கூச்சல் இட்டிருப்பர். பின்னர் இக்கூச்ச்லும் ஒரு கட்டுப் ப்ோட்டின் உள்ளடங்கி வந்தமையே பாடல் பிறக்கக் காரண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/322&oldid=751149" இலிருந்து மீள்விக்கப்பட்டது