பக்கம்:இலக்கியக் கலை.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் : 25 கவிதையும் அநுபவமும் உணர்வும் அறிவும் மனிதனிடத்துக் காணப்பெறும் அறிவு, உணர்ச்சி என்ற இரண்டனுள்ளும் உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டே கவிதை பிறக்கிறது. உணர்ச்சி, அறிவைப் போல ஆராய்ச்சிக்கு உட்படுவதில்லை. அதனை அனுபவித்துக் காணலாமே தவிர, வேறு ஒன்றும் செய்தல் இயலாது. சர்க்கரை என்ன பொருளைப் பற்றியும், அதன் தன்மையைப் பற்றியும், அதன் இயல்பு, ஆக்கம் என்பன பற்றியும் அறியவேண்டுமானால் அறிவின் துணை கொண்டுதான் ஆராயவேண்டும். ஆனால், அதே சர்க்கரையின் இனிப்பு இயல்பை உணரவேண்டுமானால் வாயில் போட்டு அநுபவிப்பதைத் தவிர வேறு வழியில்லை. சர்க்கரையின் ஒரு துண்டுகூட இல்லாமல் அதன் இயல்பை ஆராயலாம். ஆராய்ந்து அதன் ஆக்கத்தை மற்றையோருக்கு எடுத்து விளக்கலாம். ஆனால், அதனை உண்ணும் பொழுது ஏற்படும் அநுபவத்தைப் பிறருக்கு எடுத்துக்கூறல் இயலாது. பிறருக்கு எடுத்துக்காட்ட விரும்பினால் ஒரு பிடி சர்க்கரையை அவர்கள் வாயில் கொட்டுவதே சிறந்த வழி. கவிதை அநுபவிப்பதற்கே கவிதையும் சர்க்கரை போன்றதே; அதனைப்பற்றி அறியவேண்டியபொழுது அறிவின் துணைகொண்டு அதன் இயல்பு, தன்மை, புறத்தோற்றம், வடிவு உள்ளீடு முதலிய வற்றை ஆராயலாம். ஆனால், அவ்வளவோடு நின்று விட்டால் சர்க்கரையை அறிந்துகொள்ளவேண்டிய ஒருவன் 'கேதன இரசாயன நூலைப் படித்துப் பார்த்துத் திருப்தி அடை வதையே ஒக்கும். எனவே, கவிதையின் உண்மையான இயல்பை உணரவேண்டுமாயின் அதனை அநுபவித்துக் காணவேண்டுமே தவிர ஆராய்ந்து பயனில்லை. அறிவ்ால் அநுபவம் இல்லை அறிவின் உதவி கொண்டே' எதனையும் அநுபவிக்க முடியாத என்ற ஐயம் சிலர் மனத்திலாதல் எழலாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/324&oldid=751151" இலிருந்து மீள்விக்கப்பட்டது