பக்கம்:இலக்கியக் கலை.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையும் அநுபவமும் 305 அநுபவம் உண்ர்ச்சியின் பிற்பட்டதே தவிர அறிவின்பாற் பட்டதன்று குழந்தை ஒன்றை எடுத்துக்கொள்வோம். அக்குழந்தை யின் அழகிலும், இன்பத்திலும் ஈடுபட்டுவிட்டால் இன்பமாகிய அனுபவம் தோன்றுகிறது. குழந்தை யாருடையது? அதன் தன்மை என்ன? என்ற ஆராய்ச்சிகள் அங்கே தோன்றுவதில்லை. அறிவு கொண்டு ஆராய்ந்தால் 'தோல், எலும்பு, சீழ், நரம்பு, பீழை துன்று, சோரி பிண்டமாய் உருண்டு வடிவானது'தான் குழந்தை என்ற மெய்ம்மை வெளிப்படும். இதனை மறுத்தல் இயலாதுதான். ஆனால், இங்கு அனுபவம் தோன்ற வழியில்லை என்பதை நன்கு உணர முடியும். குழந்தையுடன் விளையாடும்பொழுது ஏன் இன்பம் தோன்றுகிறது என்று ஆராய வேண்டுமானால் அறிவின் துணையை நாடலாம். எங்கே இன்பம் பிறக்கிறது. என்பதற்குக்கூட ஒருவாறு அறிவு விடைகூறும். ஆனால், இன்பம் எத்தகையது என்பதை அறிய அறிவ்ால் இயலாது. உணரத்தான் முடியும். அதுவும் அனுபவித்துத்தான் உணர முடியும், . . . வேறு நிலைகள் . . . . . . . . - - அறிவின் தொழிலையும் அநுபவத்தின் தொழிலையும் அறிய ம்ற்றோர் எடுத்துக்காட்டினையும் காணலாம் கல்வி நிரம்பிய ஒருவன் இருக்கிறான். அவ்னுக்கு மிகச் சிறந்த அன்புடையர் ஒருவர் இடிந்துவிட்டதாக வைத்துக்கொள்வோம். அப்பொழுது அவன் வருந்துகிறான்; அழுகிறான். ஏன்? பிறந்தவர் யாவரும் இறப்பது உறுதி எனும் பெற்றியும், "முடிசார்ந்த மன்னரும் முடிவில் ஒரு பிடி சாம்பல் ஆவர்' எனும் சிறந்த உண்மையும் அவன் அறியாததா? அறிவின் துணை கொண்டு ஆராய்ந்தால் அழுவது பேதைமை என்பதும் வெளிப்படாதா? நாமும் ஒருநாள் அவ்வாறு ஆகத்தான்போகிறோம் என்ற பேருண்மை அவன் அறியாததா? பின்னர் ஏன் அழுகிறான்? அழும்பொழுது அவன் அறிவு யாண்டுச் சென்றுவிட்டது? அங்ங்ணம் கற்றறிந்த ஒருவன் படும் துயரத்தைக் கண்டு. சிலர் அவனை எள்ளி நகையாடுவதோடு நில்லாமல் துன்பத்தை மிகவும் பெரிதாக்கிக்கொள்கிறான் என்று கூறுவதையும் கேட்கிறாமே. அவ்வாறு அவர்கள் கூறினதைக் கேட்டவுடன் அங்ன் தன்னுடைய துயரத்தை விட்டுவிடுகிறானா? இல்லையே. ஏன்?'அவன் அறியாதது ஒன்றையும் ஒருவருங் கூறிவிடவில்ன்ல். பல்லவா? ஆதலால்தான் அதைக் கேட்டதும். அவ்ன் துயரம் ஆறிவிடவில்லை. இதிலிருந்து ஓர் உண்மை வெளிப்பட்டே ம்ே. இ. -20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/325&oldid=751152" இலிருந்து மீள்விக்கப்பட்டது