பக்கம்:இலக்கியக் கலை.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையும் அநுபவமும் 311 சுவையினும் மேம்பட்டதாக அது நிகழ்கிறது. இவ்வாறு செய்வதே கவிதையில் உள்ள அநுபவத்தைப் பெறச் சிறந்த வழியாகும். இதிலிருந்து மற்றேர் உண்மையும் புலனாகும். திருவாசகம், தேவாரம், திருவாய்மொழி, திருத்தொண்டர் புராணம் முதலிய நூல்கள் ஏனைய இலக்கியங்களைப் போலச் சிறந்த கவிதைகளால் ஆக்கப் பெற்றிருப்பினும் அவ் வேனைய கவிதைகளில் தோய்வதுபோல் இவற்றில் தோய இயலாது. காரணம், அவ்விலக்கியங்கள் நம் அனைவர்க்கும் பொதுவான அன்பு, காதல், வீரம், வெகுளி முதலிய உணர்ச்சியையும் அநுபவத்தையும் அடிப்படையாகக் கொண்டு தோன்றுகின்றன. எனவே, அவற்றைப் படிக்கும் பொழுது ஏற்கெனவே நம்மில் பெர்திந்து கிட்க்கும் ஒர் உணர்ச்சியை அது தட்டி எழுப்புகிறது. ஆதலின் பலரும் அதில் ஈடுபட முடிகிறது. ஆனால், பக்தியாகிய உணர்ச்சி, அனைவர்க்கும் வாய்ப்பது ஒன்றன்று. எனவே, அப்பக்தி யாகிய அநுபவத்தில் திளைத்து அதன் அடிப்படையில் தோன்றிய கவிதையை ஏற்கெனவே அப்பக்தி அநுபவம் கொஞ்சமும் இல்லாதவர் அநுபவித்தல் இயலாத காரியம். இத்தகைய இயல்பு இலக்கியத்திற்கு மட்டும் என்றில்லை. கணக்கு விஞ்ஞானம் முதலியவற்றிற்கூட எல்லார்க்கும் விருப்பமும், ஈடுபாடும் ஏற்படுவதில்லை யல்லவா? ஆனால், அதே சமயத்தில் வாழ்நாள் முழுவதும் கணக்கு ஒன்றேயன்றி வேறொன் றிலும் விருப்பம் செலுத்தாதவர்களும் உண்டன்றோ? . இவர்களும் கலைமனப்பான்மை படைத் தவர்களே. அத்னால்தான் தம்மை மறந்து இவர்கள் த்ரீம் மேற்கொண்ட தொழிலில் ஈடுபடுகின்றன்ர். அதேபோல் முன்னர்க்கூறிய கவிதைகளில் ஈடுபடுவதற்கும். கலைமன்ப் பான்மை வேண்டும். சுருங்கக் கூறுமிடத்து அநுபவிக்கும் பொருளிலே, தம்மை மறந்து ஈடுபட்டு அநுபவிப்பதே கலை மனப்பர்ன்மை என்றுகூடக் கூறலாம். ஆனால், இவ்வாறு அநுபவிப்பவர்கள் அனைவரும் கலைம்ை உண்டாக்க் இயலாது. அது அதைவிடப் பெரியதொரு சக்தியாகும். என்றாலும் கவிதையைப் பாடி அநுபவிப்பதற்குக் கலை மனப்பான்மை வேண்டும் என்பதே இங்கு நாம் திறிய வேண்டியது. அதுவும் ஏற்கெனவே நம்: ம்னத்திள் இருக்கும் உணர்ச்சியாக இருந்தால் ஒழியப் பயனில்லை. ஆதில்ால் தான் பக்திச்சுவைப் பாடல்கள் அனைவர்க்கும் ஒருபடித்தான அநுபவத்தைத் தருவதில்லை. இந் ിസ്ട്രേ கீழ்வரும் கவிதைகளைக் காண்பேர்ம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/331&oldid=751159" இலிருந்து மீள்விக்கப்பட்டது