பக்கம்:இலக்கியக் கலை.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையும் மக்கட் பண்பும் $15 கவிதையைப்பற்றி இதனைச் சற்று விரிவாக ஆராய்வோம். கவிஞனைப் பற்றிக் கோல்ரிட்ஜ் என்ற ஒரு பெரியார் கூறுஞ் சொற்களைக் காண்பேர்ம். இவரே ஒரு கவியும், இலக்கியத் திறன் ஆய்வாளரும் ஆவர். அவர் கூறுவதாவது, "உலகில் வாழும் நாம் பழக்க வழக்கங்கள் காரணமாகவும் தன்னலம் காரணமாகவும், பல பொருள்க்களைக் கண்டுங்கூட அநுபவிக்க இயலாமல் இருக்கிறோம். ஆனால் இதே பொருள்களைக் காணுகிற கவிஞ்ன் அவற்றில் உறையும் அழகை எடுத்துக் கூறுமுகமாக நாமும் அவற்றை அநுபவிக்குமாறு செய்கிறான். நாம் என்றுங் காணுகிற பொருள். களிலேயே இவ்வழகு தங்கி இருத்தல் கூடும். கண்ணிருந்தும் கர்ண்ாமல், செவி இருந்தும் கேளாமல் இருக்கும் நம்மைக் கானும்ாறும் கேட்குமாறுஞ் செய்வது கவிஞன் தொழிலாம்.' இதிலிருந்து ஒன்று அறிந்துகொள்ள முடிகிறது. கவிதை வாழ்க்கைக்குப் பயன்படவில்லை என்று நாம் கூறும்பொழுது, வாழ்க்கை என்றால் என்ன என்று உணராமலோ, அன்றித். தவறாக உணர்ந்தோ தான் கூறுகிறோம். தாயுமான அடிகள் கூறியபடி "யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும், உறங்குவதுமாய் முடியும்.’’ வாழ்க்கையையே நாம் மேற் கொண்டுள்ளோம். இந்நிலையிலிருந்து, கவிஞன், கவிதையூைதரம் 2. நோக்கினால் உண்மையை உணர இயலாது. மனிதன் உண்வ்ால்' மட்டும் வாழவில்லை. மனத்தாலும், அம்மனம் காணும் உயரிய கற்ப்ன்ன்கள்ாலும்கூட வாழ்க்கை நடைபெறும். முன்னைங்தை விட்டுவிட்டுக் கவிஞன் பின்னைய்ன்த் மட்டும் தனக்குக் குறிக்கோளாக ஆக்கிக்கொள்கிறான். உணவைப் பற்றியுங்கடச். சிற்ப்ப்ாக்ப் பேசவேண்டுமான்ால் சிறந்த பொருள்கள் செய்யப்பட்டி: ஒரு விருந்தைப்பற்றித் தானே பேசுகிறோம். அதே போல மனித மனத்தையும் அதில் தோன்றும் கற்ப்னையையும் ப்ற்றிக் கவின்த பேசவேண்டுமேயானால், சாத்ாரணக் கற்பனையைப் பற்றிப் பேசுவதில் ப்யனில்லையல்லவா? எனவே குறிக்கோள் நிலையில் உள்ளவற்றைப்பற்றியே கவிதை பேசுகிறது. வர்ழ்க்கிைனியப் பற்றிப்பேசினாலும் வாழ்க்கையில் நாம் கண்டுங் காணப் புதுமைதளையே எடுத்துப் பேசுகிறது. மக்கட் பண்பும் பேசும் கவிதை மக்களைப்பற்றி எழும் கவிதைகள் அனைத்திலும், மக்கட் பண்டே பேசப்படுவதை அறியலாம் மேலாக நோக்குமிடத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/335&oldid=751163" இலிருந்து மீள்விக்கப்பட்டது