பக்கம்:இலக்கியக் கலை.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

813 இலக்கியக் கலை உணர்ச்சியைத் தட்டி எழுப்பி, நடந்த செயலின் தன்மையையும், அதனால் அழிந்த பொருளின் பெருமையையும், கவிதை தெளிவாக்குகிறது. நடைபெற்றது சிறுசெயல். விருப்பமில்லாத பிறன் மனைவியைக் கொணர்ந்து சிறை வைத்தது மிகப்பெரிய காரியம் என்று கூறற்கில்லை. அதனை ஆசிரியர் பிரை' என்ற சொல்லால் பெற வைத்துவிட்டார். அழிவுற்ற பொருள்கள் எவ்வளவு? பாற்கடல் என்ற சொல்லால் அதனையும் குறித்து விட்டார். மனிதப் பண்புகளில் சில எண்ணிக்கையால் பெரியன. ஆனால் வலிமையற்றவை. சில தன்மையால் பெரியவை. வன்மை மிக்குடையவை. இவை இரண்டின் பரிணாமத்தையும் இரு ச்ொற் கள்ால் ஆசிரியர் குறித்துவிட்டார். மக்கட் பண்பில் ஒன்றால் விளையுந் தீமை எத்தகையது என்பதை இக்கவிதை விளக்கக் கண்டேர்ம். இனி மற்றொன்று பொதுவான ஒரு பண்பு பற்றிய பாடல். மனிதர்கள் என்றால் பிற உயிர்களிடத்து இரக்கம் என்பது இருந்துதான்' திரும். * கொலை செய்கிற மனிதனுங்கூடத் தன் மனைவி மக்களிடத்து அன்பு பூண்டு இருத்தலைக் காண்கிறோம். கொடுமையே தலைநின்றுள்ள புவியும் தன் குட்டிகள்பால் அன்பு செலுத்துகிறது. இவ்வளவில் இப்பண்பு நின்றுவிடும்ானால் இதில் வியப்பு ஒன்றுமில்லை. ஆனால் இப்பண்பு சிறிது வளருமே யானால், தொடர்புடையவர்களிடம் மட்டுமல்லாமல், தொடர்பில் லாதவர்கள் மாட்டுஞ் செல்லும் தன்மை பெறும். அப்பொழுது இதே பண்பு அருள் என்னும் பெயரைப் பெறுகிறது. இது இன்னஞ் சிறிது வளர்ந்தால் தன் இனம் அல்லாத ஏனைய உயிர்களிடமும், செல்லும் வன்மையைப் பெறும். அங்ங்ணம் எல்லா உயிர்கள் மேலும் அன்பு செலுத்தும் இய பாகிய அருள் எல்லா மக்களிடத்தும் இயல்பாக அமையும் ஒரு பண்பன்று. அவ்வன்மை பெற்றவரை பெரியவர் என்று உலகம் போற்றும். இது கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவதால் அமையும் ஒரு பண்புமன்று. இப்பண்பைப்பற்றி மேலே கூறியவாறும் கூறலாம். அங்ங்ணம் கூறினால், இதற்கு வன்மை இல்லாமற் போய் விடுகிறது. மக்கட் பண்பில் சிறந்ததாகிய இது பலரிடம் காணப்படாமல் இருந்தும், மிகுதியும்,வேண்டப்படும் ஒன்று என்பதைப் பலரும் அறிவதற்கு இயலாமல் போய்விடுகிறது. இதே கருத்தை ஒரு கவிஞன் கவிதை யில் பெய்துவிடுகிறான். அப்பொழுது அது புது மெருகுபெற்று விளங்க ஆரம்பித்துவிடுகிறது. எத்தனை பக்கங்கள் எழுதினாலும் ஒரு கவிதையில் அமைக்கும் ஆற்றலை அது பெறுவதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/338&oldid=751166" இலிருந்து மீள்விக்கப்பட்டது