பக்கம்:இலக்கியக் கலை.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையும் மக்கட் பண்பும் #19. பெரியதொரு காடு ஒர் ஏழை. வேடனின் குடும்பம் அதில் வசிக்கிறது. வேடனுக்குக் குழந்தை ஒன்றுமில்லை. வேட்டைத் தொழிலைச் செய்பவனாகலின உயிர்களிடத்து இரக்கம் என்பது அவனிடம் இருக்குமாவெனக் கூடப் பலர் ஐயுறலாம். அவன் மனைவியும் அம்முறையிலேயே பழகியவன் தான். என்றாலும் என்ன? உயிர்களுக்கு இயற்கையாக உள்ள உயரிய பண்புகள் அவர் களிடமும் சில இல்லாமலா போய்விடும்? இருக்கலாம். ஆனாலும், வாயில்லாப் பிராணிகளிடம் வேட்டைக் காரனுக்கும், அவன் மனைவிக்கும் அன்பிருந்தது என்றால் அது மிக வியப்பல்லவா? காலை எழுந்ததிலிருந்து, இரவு வர்ை விலங்குகளைப் பிடிப்ப திலேயே காலத்தைப்போக்கும் ஒருவனுக்கும், அவற்றைக் கொன்று சமைப்பதையே தொழிலாகக் கொண்ட ஒருத்திக்கும் விலங்கு களிடத்தில் மிகுந்த அன்பிருந்தது என்றால் இதை யார் நம்ப முடியும்? ஆனால் மனித இனத்தில் இவ்வாறு பல மாறுபட்ட பண்புகள் ஒருவர் மாட்டே இலங்கக் காண்கிறோம். மனிதப் படைப்பில் இதுவும் ஒரு விந்தைதான்! இந்த விந்தையை எடுத்துக் கவிதை புனைகிறான் ஒரு கவிஞன். காட்டில் வாழும் வேடன் ஒருநாள் வேட்டையாடிவிட்டுக்களைப்பு மிகுதியால் விட்டிற்குத் திரும்பி வருகிறான். வீட்டுவாயிலில் உள்ள ம்ரநிழல் உறக்கத்தைக் கூவியழைக்கிறது. அப்படியே கையைத் தலையணையாகப் பயன் படுத்திக்கொண்டு, முற்றத்தில் உறங்கிவிடுகிறான். அவன் பக்கத்தில் ஒரு பெண்மான் கட்டப்பெற்றிருக்கிறது. அம்மான் பார்வை மிருகமாகப் பிடித்துப் பழக்கப்பட்டு வருவதாகும். தன்னிச்சை போல் ஒடித் திரியும் உரிமையற்றது. எனினும் அப்பிணைமானைத் தேடி ஒரு கலைமான் வர, இரிண்டுமாகக் கூடி விளையாடுகின்றன. வேடன் உறங்கும் இடத்திற்கு அப்பால், அன்றிரவு உணவிற்காக, வேடச்சி திணையை உலர்த்தி இருக்கிறாள். வேடன் உறங்கும் நிலையைக் கண்ட ஒரு காட்டுக் கோழி அத்தினையைத் தின்னத் தொட்ங்குகிறது. இந்நிலையில் வேட்டுவச்சி கோழியைக் கண்டுவிட்ர்ள். கோழியை வ்ெருட்டி ஒட்டாவிட்டால் இரவு உணவு இல்லையாய்விடும். ஆனால் ஒசை உண்டாக்கிக் கோழியை வெருட்டினால் இரண்டு துன்பங்கள் நேரிடும். அயர்ந்து உறங்கும் வேடன் உறக்கத்தினின்று விழித்துக் கொள்வான். ஒரு வேளை மீண்டும் அவனை உறங்குமாறு செய்து விடலாம். ஆனால் பிணைமானோடு கூடிவிளையாடும் கலைமான் ஒடிப்போய்விடும். மீட்டும். எவ்வளவு வருந்தி அழைத்தாலும், அப்பினை மானே. அழைத்தாலும், அக்க்லைமான் வாராது. காத லுணர்ச்சியைவிட வன்மை பொருந்தியது, தற்காப்புணர்ச்சி யன்றோ இதனை நன்கு ஆராய்ந்தாள் வேட்டுவச்சி. பிணைமான் இன்பத்தைப் பார்த்தால் இரவு பட்டினிகிடக்க நேரிடும். தமக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/339&oldid=751167" இலிருந்து மீள்விக்கப்பட்டது