பக்கம்:இலக்கியக் கலை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*13 - இலக்கியக் கலை 'முருகாற்றுப்படுத் த் எனும் அடியினைக் கொண்டே இப்பாடலு க்குப் பெயர் அமைக்கப்பட்டு இருக்கிறது. பண்டை உரையாசிரியர் கள் முதல் இன்றைய ஆராய்ச்சியாளர்கள்வரை இவ்வடிக்கு @ಕ್ರ೧೯5. T விளக்கங்கள் தந்துள்ளனர். புலவரை (அடியவரை) முருகனிட்ம் ஆற்றுப்படுத்தும் பாடல்' என்பது பழைய விளக்கம். நயங்களைத் தரக்கூடியதாக அமைவது படைப்பு இலக்கியம் என இக்காலத்திறனாய்வாளர் கருதுகின்றனர். அடுத்துப் பத்துப்பாட்டில் உள்ள நெடுநல்வாடை எனும் பாட்டின் பெயரைக் காண்ப்ோம், நீண்ட நல்ல வாடைக்காற்று எனும் பொருளை வெளிப்படையாக இப்பாட்டின் பெயரே புலப் படுத்துகிறது. ஆனால் கூர்ந்து நோக்குகின்ற பொழுது, வாடை என்பதே தமிழ்நாட்டு மக்களை வாட்டுவது (வருத்துவது) எனும் இயல்புக்கு முரணான பொருளை இப்பெயர் தருவது வியப்பாக இருக்கிறது. ஆனால், கதைமாந்தரின் உள்ளவுணர்ச்சிக்கு இன்பம் ஊட்டுவதாக அமைவதே இப்பாட்டு உணர்த்தும் குறிப்புப் பொருளாகும். இத்தகைய முறையில் பயிலுந்தோறும் பயிலுந் தோறும், புதிய புதிய பொருளாழத்தையும், சொல் நலத்தையும், உணர்ச்சிக் கணிவையும் ஊட்டுவது இலக்கியம் என்பது தெளிவா கிறது. - இவற்றைப்போன்று, மதுரைக்காஞ்சி', 'குறிஞ்சிப்பாட்டு' :பட்டினப்பாலை', 'மலைபடுகடாஅம் முதலிய பாடல்பெயர்களுக்கு நுட்பமான விளக்கம் தர இயலும், .. . இவ்வாறு இலக்கியத்தின் இயல்புகளைக் கண்டறிந்து, அவற்றின் செஞ்சொற் கவியின்பத்தில் திளைப்பதை மாதுளம் பழத்தையும், பலாப்பழத்தையும் அரிதின் முயன்று சுவைத்து உண்டு ம்ே.கிழ்வ்ன்த ஒக்கும் என்று சமஸ்கிருத மொழிவாணர் கூறுவர். . .. வெளிப்படையாகப் பொருள் நய்த்தையும் சொல் நயத்தையும் ஒருங்கே இலக்கியம் புலப்படுத்துவது உண்டு. இதனை வாழைப் பழத்தின் தோலை எளிதில் உரித்துத் தின்பதைப் போன்ற இல்க்கிய நுகர்ச்சி என வடமொழி அறிஞர் கூறுவர். வாழைப்பழவகை இலக்கியம் இக்காலத்திய மேற்கு நாடுகளில், திறனாய்வாளர்கள், பேருரைகளை' (Discourses) இத்தகைய பாங்குடையனவாகப் போற்றுகின்றனர். இன்றைய சனநாயக உலகில் மேடைப் பேச்சு களும், நாடாளுமன்ற, சட்டமன்றப் பேருரைகளும், கருத்தரங்க எழுத்துரையும், மாநாட்டுச் சொற்பொழிவுகளும் சொற் பொருளியல் அமைப்பிலும், சொற்றொடரியல் பாணியிலும் நடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/34&oldid=751168" இலிருந்து மீள்விக்கப்பட்டது