பக்கம்:இலக்கியக் கலை.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் : 21 கல்ை கலைக்காகவே எதற்காகக் கவிதையைப் படிக்கவேண்டும்: இவ்வினாவிற்கு ،.. مب. விடை பலர் பலவாறாகக் கூறுவர். ஒரு சாரார் பொழுது போக்கிற்காகவும், இன்பத்தைப் பெறுவதற்காகவும் படிக்க வேண்டும் என்பர். இனி ஒரு கூட்டத்தார். பயன் கருதியே கவிதையைக் கற்கவேண்டும் என்பர். யார் கூறுவது உண்மை என்று முடிவு கட்டுவது சிறிது கடினத்தான். இன்றைக்கு இவ்விரு கூட்டத்தாரும் உண்டு. முதல்வகையாரின் கட்சியைப் பர்ர்ப்போம். கவிதை என்றால் அது ஒரு கலைதானே? கலையை எவ்வாறு அனுபவிக்கிறோம்? வேறு பயன் கருதாமல், அதனை அனுபவிக்கும்பொழுது உண்டாகும் இ ன் ப ம் ஒன்றையே கருதித்தானே, கலையை அனுபவிக்கிறோம்? ஒரு சித்திரம் இருக்கிறது; அதைப் பார்த்து மகிழ்கிறோம். ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலைப் பார்ப்பதற்கு உலகின் பல்வேறு இடங்களிலிருந்தும் மக்கள் வருகிறார்கள். அதனைக் கண்டு அனுபவிக்கிறார்கள், அதிலும் முழு நிலா வீசுகின்ற இரவில், அதைக் கண்டு மகிழு கின்றனர். என்ன பயன் விளைகிறது? காணுகின்ற அந்த நேரத்தில் உண்டாகிற மகிழ்ச்சியையும் இன்பத்தையும் தவிர வேறு என்ன லாபம் உண்டாகிறது? ஒன்றும் இல்லை. பயன் இல்லாமல் ஒரு காரியத்தைச் செய்வது தவறு என்றால், தாஜ்மகாலைக் காணுகின்ற அனைவரும் என்ன, பயனற்ற வேலை செய்கிற வர்களா? கலையில் பயன் உண்டா? மேலும், கலையை அனுபவிப்பதில், அனுபவம் ஒன்றைத் தவிர வேறு பயனைக் கருதினால் அது கலையே ஆகாது. அனுபவம் கூறுவதெல்லாம் இன்பம் ஒன்றையே குறிக்கும். கலைப்பொருளைப் படைக்கும் கவிஞன் என்ன நிலையில் அதனை இயற்றுகிறான்? அவன் மனத்தில் ஒரு கற்பனை தோன்று கிறது. அதில் ஈடுபட்டு மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறான். ஆவது தேசத்தில் ஆழ்ந்து விடுகிறான். இவ்வுணர்ச்சி அளவு மீறிச் சென்று அவன்ையே ஆட்கொண்டு விடுகிறது. இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/342&oldid=751171" இலிருந்து மீள்விக்கப்பட்டது