பக்கம்:இலக்கியக் கலை.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலை கலைக்காகவே 323 நிலையில் மனத்துள் றிரம்பி இருக்கும் உணர்ச்சியை வெளியிடு கிறான். அது ஒரு கலைப்படைப்பாக முசிழ்க்கிறது. அந்தக் கலைப் பொருளை இயற்றுகையில் உணர்ச்சி வசப்பட்டவனாக அவன் இருக்கிறானே தவிர, வேறு எதையும் அவன் கருதுவதில்லை." இவ்வாறு அவன் ஆக்கிய கலை ஒரு தனி உலக மாகவே உள்ளது. அந்தக் க்லை உலகில் புகுந்து அதனை அனுபவிக்கத் தொடங்குகையில் புற உலக நினைவே சற்றும் இருக்கக் கூடாது. கவிதை கற்பனையின் துணைகொண்டு சில அனுபவங்களை வெளியிடுகிறது, கவிஞன் அனுபவித்த இவ்வனுப வங்களை நாமும் அப்படியே பகிர்ந்துகொண்டு அனுபவிக்க முற்பட வேண்டுமே தவிர வேறு பயன் யாதானும் அதில் விளைகிறதா என்று ஆராய்வதால் கவிஞன் என்ன பயனைக் கருதி அதனை ஆக்கினானோ அந்தப் பயனை இழந்துவிடுகிறோம். படிக்கும்பொழுது உண்டாகும் இன்ப அனுபவம் ஒன்று தவிரக் கவிதை வேறு பொருள்களைக்கூடத் தன்னகத்தே தாங்கி நிற்கலாம். ஆனால் இவை இர ண் டா ந் தரமானவை. அவற்றை நாம் கவனிக்கத் தொடங்கினால் தலையாய பயனை இழக்க தேரிடும். இக்கருத்தை ஏ. சி. பிராட்லி கூறுகிறார். "பல நாட்களுக்குப் பிறகு கிடைத்த கொஞ்ச அரிசியையும், சிட்டுக் குருவிகள் கொத்தித் தின்பதைப் பார்த்துவிட்டு, நம் காலத்தில் வாழ்ந்த கவிஞர் பாரதியார் உடனே என்ன செய்தார்? அரிசியை எடுத்து இறைத்துவிட்டு, காக்கை குருவி எங்கள் ஜாதி” என்று பாடினதாகக் கேள்விப்படுகிறோமே, இது எக்கருத்தை வலியுறுத்துகிறது? அவருடைய மனந்தில் நிரம்பியிருந்த உணர்ச்சிப் பெருக்கம் கவிதையாக வெளிப்பட்டதே தவிர, வேறு ஓர் எண்ணமும் அவருடைய மனத்தில் அப்போது இருந்திருக்க நியாயம் இல்லை. அக் கவிதையைப் படிக்கும் நாமும், மகிழ்ச்சி அட்ைவதைத் தவிர வேறு பயனை எதிர்பார்த்தல் கூடாது. கூறவியலாக்.கலை இன்பம் இந்தக் கட்சி பேசுபவர் இன்னும் ஒரு படி மேலேயும் சென்றுவிடுகிறார்கள். சிறந்த கவிதை என்றால் அது படிக்கும்பொழுதே தெரிந்துவிடும். அதி ல் உண்டாகின்ற அனுபவத்தை எடுத்து அலசிப்பார்க்க இயலாது. காரணம் அனுபவத்தைச் சொற்களால் கூற் இயலாது. அவ்வாறு கூறப் புகுந்தாலும் அக் கவிதையின் சொற்களாலேயே மிண்டும் கூறலாமே தவிர, வேறு சொற்களைப் பயன்படுத்திக் கவிதை தரும் அனுபவத்தைத் தர இயலாது. இன்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/343&oldid=751172" இலிருந்து மீள்விக்கப்பட்டது