பக்கம்:இலக்கியக் கலை.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலை கலைக்காகவே 325 பயன்படுத்திய நிலை ஏற்பட்டது. நமது மொழியிலும் சென்ற நூற்றாண்டின் இறுதியில் சீட்டுக்கவிகள் எழுதும் வழக்கம் ஏற்பட்டதை நாம் அறிவோம். தனிப்பாடல் திரட்டில் உள்ள பெரும்பாலான பாடல்கள், வடிவில் பாடலைப்போல இருந்தாலும் கவிதைக்கு உரிய வேறு தகுதி ஒன்றும் அற்றிருப்பதை அறியலாம். இந்த நிலை யில்தான் புரட்சி ஒன்று ஏற்பட்டது, அதன் பயனாகவே கவின்த்க்குப் பொருட்சிறப்பு வேண்டும் என்ற எண்ணம் அற்று, வீடிவே போதும் என்ற கருத்துத் தோன்றலாயிற்று. வெறும் கொள்கைகளையும் நீதிபோதனையையும் ஏற்றிக் கொண்டு நிற்கும் வண்டிகளாகவே கவிதை பயன்பட்டதைக் கண்டு, தோன்றிய வெறுப்புக் காரணமாகவே கவிதைக்கு இவை இன்றியமையாதவை அல்ல என்ற எண்ணம் தோன்றி வளர்ந்தது. ஆங்கில இலக்கியத்திலும் இத்தகைய ஒரு புயல் அடித்த காலம் உண்டு. கவிதைத் திறனாய்வு செய்யும் ஏ சி. பிரர்ட்லி போன்றவர்கள் எழுப்பிய கலை கல்ைக் காகவே? என்ற குரலும் இது கருதியே வந்ததாகும். பிராட்லி போன்ற சிலர் இக்கொள்கைக்கு ஆதரவு தந்த போதிலும் ஆங்கிலக் கவிஞர்களில் மிகப் பெரியவர்கள் என்றும் கருதப்பெறும் அனைவரும் இக் கொள்கைக்கு மாறானவர்களே ஒப்பற்ற தத்துவ ஞானியாக இல்லாத ஒருவன் சிறந்த கவிஞனாக இருந்ததில்ல்ை' என கோல்ரிட்ஜ் என்ற கவிஞரும் சிறந்த கவிஞர் எனப்படுவோர், அவர் கவிதை பிறர் மனத்தில் தோற்றுவிக்கும் பண்பாட்டைக் கொண்டே முடிபு செய்யப்படுவர் என எமர்சன் என்ற பேரறிஞனும் கூறியுள்ளனர். ' உயிர் வாழ்வுக்கு வேண்டிய நல்லொழுக்கத்திற்கு மாறாகப் போதிக்கும் எந்தக் கவிதையும் வாழ்வுக்கு எதிராகவே செய்யப்பட்ட கல்கமாகும் என ஆர்னால்ட் என்ற திறனாய்வாளரும் கருதுகிறார். கலை தருவது மகிழ்ச்சியா? Séguinr? இனி மற்றொரு கருத்தையும் ஆராய்வோம். வெறும் இன்பம் ஒன்றையே அடிப்படையாகக் கொண்டு கலை இருத்தற்கியலாது என்பதே இவர்கள் கொள்கை. ஆனால் வெறும் இன்பம் என்று இவர்கள் க்றும்பொழுது அச் சொற்குப் பொருள் வேறு. மனம் ஒன்றோடு நின்றுவிடுவதற் குரியதும், நிலையற்றதும் உடனே மறைந்து விடுவதுமான இன்பத்தையே இவர்கள் குறிப்பிடுகிறார்கள் பசியால் மிகவும் வருந்தியிருக்கிறான் ஒருவன். அவனுக்கு நல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/345&oldid=751174" இலிருந்து மீள்விக்கப்பட்டது