பக்கம்:இலக்கியக் கலை.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 இலக்கியக் கலை உணவு கிடைக்கிறது, அவன் மனம் மகிழ்ச்சியை அடை கிறது. ஆனால் பசி தணிந்தவுடன், அம் மகிழ்ச்சியும் மறைந்துவிடுகிறது. கவிதையில் உண்டாகும் மகிழ்ச்சி இத்தகையன்று, வாழ்க்கையில் பெறும் சிற்சில பொருள் களை நினைக்குந்தோறும் மகிழ்ச்சி, ஆழ்ந்த இன்பம் உண்டர் கிறது. அதுபோன்ற இன்பமே கவிதையில் கிடைக்கிறது இது கருதியே நம் நாட்டுப் பெரியார் 'ஆயுந் தொறுந் தொறும் இன்பம் தருந்தமிழ் எனக் கூறிப் பேர்யினர். நேற்று உண்ட சுவையான உணவை இன்று நினைத்துப் பார்ப்பதனால், இன்பம் உண்டாவதில்லை, ஆனால், சென்ற ஆண்டிலும் அதற்கும் பல்லாண்டுகள் முன்னருங்கூடக் கற்ற ஒரு கவிதை இன்று நினைத்தாலும், என்று நினைத்தாலும், இன்பத்தைத் தருகிறது, காரணம், கலைகளெல்லாம் அழகின் அடிப்படையில் தோன்றியவையே. அழகு என்றும் இன்பம் தரும் ஒன்று. கீட்ஸ் என்ற பெரியார் ‘அழகிய பொருள் என்றும் இன்பந் தருவது என்று கூறியுள்ளார். கவிதை வாழ்க்கை பற்றியதே அழகு என்றால் அது வாழ்க்கைக்கு நன்மை செய்வ தாகவே இருக்கும். அவ்வாறு செய்யாத ஒன்று அழகுடை யதுபோல் தோன்றினாலும் அது போவியேயன்றி உண்மையில் அழகுடையதன்று, இனிக் கவிதையை எடுத்துக் கொள்வோம். கவிதையில் அழகும் இன்பமும் இருப்பதாகக் கூறுவர். இவை இரண்டும் எங்கே உள்ளன. கவிதையில் ஒசையிலும் சொல் அடுக்கிலும் இருக்கின்றன என்று பலர் கருதுவர். ஒரளவுக்கு இது, உண்மையே. ஆனால் வெறும் ஓசையும், சொல். அடுக்கும் மட்டும் இருந்தால் அக்கவிதை எவ்வளவு இன்பம் ஊட்டும் ? படிக்கும் பொழுது இன்பம் ஊட்டி உடன் மறைந்துவிடும் இயல்பே அதில் காணப்படும். பன்னெடுங்காலம் கழித்து நினைப்பிலும், கவிதையானது இன்பம் ஊட்ட வேண்டுமேயாயின். அது பொருட்" சிறப்பும் உடையதாக இருக்க வேண்டும். பொருட்சிறப்பு என்பது வாழ்க்கைக்குப் பயன் விளைக்கும் இயல்பே, பெரியாராகிய மாத்யூ ஆர்ன்ால்ட் என்பார். 'கவிதையின் அடிப்படை, வாழ்க்கையைப்பற்றிய விமரிசனமே." என்றும், அழியா உண்மையும், ஆழமும் மிகுதியாகப் பெற்றுத் திகழ்தலே o விதையின் இலக்கணம்' என்றும் கூறியுள்ளார். *8 - . Lr®, Hಲ್ಲ, ஆழ்ந்த கருத்துக்களைத் தருதல் ؟؟2% مہ:.. வேகம்ான உணர்ச்சிகளையும் புலனையும் அடங்கச் செய்தல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/346&oldid=751175" இலிருந்து மீள்விக்கப்பட்டது