பக்கம்:இலக்கியக் கலை.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலை கலைக்காகவே 329 மணங்கமழ் தேறல் மடுப்ப நாளும் மகிழ்ந்து இனிது உறைமதி பெரும! வரைந்து பெற்ற நல்ஊழியையே (மன்னர் பலரும் பிறருங்கூடி நின்று நின்னை ஏத்திப்புகழ், அழகிய மகளிர் பொன்னாலாய கலத்தில் ஏந்திய மதுவை வாங்கி உண்டு உனக்குள்ள ஆயுட் காலத்தை மகிழ்ச்சியாகக் கழிப்பாயாக.1 கலை கலைக்காகவே' என்று காதடைக்கக் கதறுகிறவர்கள் கவனிக்கவேண்டியது ஒன்று உண்டு. மதுரைக் காஞ்சி இவ்வறவுரை கூறுவதால் அதனைக் கவிதையன்று எனத் தள்ளிவிட முடியுமா? ஆனால் ஆசாரக்கோவை ஆசிரியருக்கும் மாங்குடி மருதனாருக்கும் வேற்றுமை இல்லையா? இருக்கத்தான் இருக்கிறது. ஆசாரக் கோவையில் அறவுரை மாத்திர்ம் உள்ளது, கவிதை இல்லை. மதுரைக் காஞ்சியில் இரண்டும் உள்ளன. குறளைவிடச் சிறந்த கவிதை எங்கேனும் கண்டதுண்டா? அதனை வெறும் அறங்கூற். நூல்' என்று சொல்லி யாரேனும் ஒதுக்க முடியுமா? அலலற்பட்டு ஆற்றாது அழுதகண் ணிர்அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை. c -குறள், 555 மக்கள்ே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில். - - ‘. . -குறள் 1071 இவை இரண்டு குறளிலும் கூறப்பட்ட உண்மைப் பொருள் எவ்வளவு ஆழமானது! ஆனால் கவிதைக்குரிய இயல்பு ஒரு சிறிதேனும் இங்குக் கெட்டிருக்கிறதா? * . . . . .';... o. இவை இரண்டு. உதாரணங்களாலும் நாம் அறிய வேண்டுவ தொன்று உண்டு. அறவுரை கூறும் செய்யுள் கவிதையாக இருக்கமுடியாது என்று கூறுவது தவறு. இதனால் கலைஞன் வேல்ை நீதி புகட்டுவதே என்று கூற வர வில்லை. அவன் வேலை இன்பத்தை இட்டும் கவிதை புனைவதுதான். ஆனால் அவ்வின்பம் நிலைத்ததாக இருக்க வேண்டுமாயின், அக்கவிதை ஆழமான் உண்மைப் பெர்ருன்ன்த் தன்னகத்தே கொண்டிருக்கவேண்டும். "இலக்கியக் 'கலை, கற்பனையின் உதவிகொண்டு ஆக்கும் உலகின், தன்ல்யாய குறிக்கோள் நமது வாழ்க்கையில் என்றுங் கண்டு கடைப் பிடிக்கவேண்டிய உயர்ந்த குறிக்கோளேயாகும்" என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/349&oldid=751178" இலிருந்து மீள்விக்கப்பட்டது