பக்கம்:இலக்கியக் கலை.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலை, கலைக்காகவே 331 கவிதையில், இந்நீதிகள் எப்பொழுதும் தலைகாட்டிக் கொண்டிருப்பின், அது நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரமாக இருந்திராமல், நெஞ்சைக் கிள்ளும் நீதி நூலாகவே இருந்திருக்கும். இவ்வுண்மைப் பொருளையே அடிப்படையில் காப்பியம் கொண்டிருப்பினும், கலைஞன் கவிதையை இயற்றுகையில், கவிதையையும் கூறவந்த நீதிகளையும் வேற்றுமை காணாவகையில் பின்னிவிட்டான். கலைக்கு உரிய இன்பமூட்டும் இயல்போடு சேர்ந்து இந் நீதியும் உள்ளே புகுந்துவிடுகிறது. வெறும் நீதியாக இருந்தால் அது நம் மன்த்தில் வெறுப்பையே உண்டாக்கும். ஆனால் கலைப்பண்புடன் சேர்ந்ததனால் அது நம்மையும் அறியாமல் உட்புகுந்து, வாழ்க்கையைச் செம்மைப்படுத்துகிறது. இத்தகைய முறையில் கவிதை புனையக்கூடிய கலைஞன், எவ்வளவு நீதிகளைப் புகட்டினாலும் நமக்கு அதனால் சலிப்பு உண்டாவதில்லை. ஏனைய பாடல்களைவிட 'இசைப்பாடல்கள் இசைக்கு முதலிடம் தருகின்றன. அவற்றில் உண்மைப் பொருள் ஏதேனும் ஒன்று கூடக் கூறப்படவில்லை என்றால் அவை கவிதையாகக் கருதப்படா கலித்தொகையும், பரி பாடலும் தமிழிலக்கியங்களில் இசைப்பாடலாக அமைந் தவை. எனினும் அவற்றுள் ஒவ்வொரு பாடலும் ஏதேனும் ஓர் ஆழமான "உட்கோளோடு திகழ்தல் கண்கூடு. பழந் தமிழ்க் கவிஞர் உவமை கூறுமுகமாகக்கூட் அரியபொருளைப் பெறவைத்தனர்: வறியவன் இளமைபோல் வாடிய சினையவாய்ச் சிறியவன்செல்வம்போல் சேர்ந்தார்க்கு கிழலின்றி யார்கண்ணும் இகந்து செய்து இசைகெட்ட்ான் இறுதிபேர்ல் வேரொடு மரம்வெம்ப விரிகதிர் தெறுதலின் அலவுற்றுக் குடிகூவ ஆறின்றிப் பொருள் வெஃகிக் உலகுபோல் உலறிய உயர்மா. வெஞ்சுரம், ---. -கலித்தொகை. 10 எதுகுலகாம்போதி இராகத்தில் பரடிக் கவிதையை நன்றாக அனுபவிக்கலாம். பாலைநிலம் சுட்ட நிலையைப் பாடல் வருணிக்கிறது. மூன்று # நான்குமுறை கவிதையைப் படித்துக் கலைத்தவுடன், கவிதையில் கூறப்ப்ட்ட பொருளும் மனத்தில் துழைகிறது. மன்னன். கொடுங்கோல் எவ்வாறு இருக்கும்? உரைநடையில் கூறினால் வெறுப்பை விளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/351&oldid=751181" இலிருந்து மீள்விக்கப்பட்டது