பக்கம்:இலக்கியக் கலை.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் ; 28 நுண்கலைகளும் கவிதையும் கலையின் அடிப்படை கலையின் தோற்றத்தால் வாழ்க்கைக்கு ஏதேனும் பயன் உண்டா? மனிதன் வேலையற்று இருக்கும்பொழுது பொழுது போக்கின் நிமித்தம் கண்ட ஒன்றுதான் கலையென்று கூறப்படு கிறதா?, இவ்வினாக்கள் மிகப் பழங்காலந் தொட்டுக் கேட்கப் படுகின்றவையேயாகும். ஹேகல் பேகன்ற பெரியார்களின் கருத்துப் படி கலை மிகவும் ஆழமான பொருளுடையது. பொழுது போக்கிற் கர்த் ஆக்கப்படுவது அன்று கலை. அதன் அடிப்படைப் பொருள். மனித மனத்தின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் தன்மைகளையும். அழியாத உண்மையின் தத்துவத்தையும். முருகியலையும் வெளிப் படுத்தலேயாம். 'கலை என்பது ஒருவகை ஆற்றல் குறிப்பிட்ட ஒரு வழியை மேற்கொண்டு முன்னரே கலைஞன் மனத்தில் தோன்றியஒரு பயனைப் பிறர் அறியச்செய்யும் ஆற்றலே ஆகும் இது என்கிறார் ஆபர்கிராம்பி என்ற திறாய்னவாளர். மிகப் பழங்காலத்தில் வாழ்ந்த மனிதர் தங்கள் கருத்துக் களில் தோன்றிய சிறந்த உண்மைப் பொருள்களைக் கலைகளின் இமே வெளியிட்டனர். அவர்கள் வாழ்க்கையில் பெற்றிருந்த பண்பாட்டை இன்று நம்க்கு அறிவிக்கும் கருவியாகத் திகழ்வன, அவர்கள் ஆக்கிய கலைகளேயாகும். இயற்கையிலும், உலகின் வளர்ச்சியிலும் காணப்படும் எந்த ஒரு சக்தி உண்டோ அந்தச் சக்தியே கலையிலும் வெளிப்படுகிறது. கலையின் குறிக்கோளும் அச்சக்தியை வெளிப்படுத்த முயல்வதே ஆகும். உலகிலேயே இச் சக்தி காணப்படினும், தனிப்பட்ட மனிதனின் விருப்புவெறுப்புக் களாலும், சமுதாயக் கட்டுப்பாடுகளாலும், தோன்றி அழியும் உலக நிலையாலும் இச்சக்தியை நாம் நன்கு அறிய முடிவதில்லை. எனவே கலை இச்சக்தியை மேலே கூறப்பட்டவற்றிலிருந்து பிரித்து நிமிக்கு வழங்க முற்படுகிறது. நிலைபேறு இல்லாததும், மாறும் தன்மை உடையதுமான உலகத்திலிருந்து இச் சக்தியைப் பிரித்து ஒருவாறு நிலைபேறு உடையதுவும், உயர்ந்ததுமான மற்றொரு வடிவில் தந்து வெளியிடுகிறது. இவ்வடிவம் மனத்தின் கற்பனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/355&oldid=751185" இலிருந்து மீள்விக்கப்பட்டது