பக்கம்:இலக்கியக் கலை.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நுண்கலைகளும் கவிதையும் ### யிலிருந்தே பிறக்கிறது. மனத்திலிருந்து பிறப்பதால் கலை அதிக மான உண்மையைத் தன்பால்கொண்டு இலங்குகிறது. இங்ங்னம் கூறுவதால் கலையோ, கலையின் வடிவமோ, உண்மைக்கே ஓர் இருப்பிடம் என்று கொண்டுவிடல் ஆகாது. ஏனையோரைவிடக் கலைஞன் உண்மையை மிகுதியும் கண்டிருப்பினும் அதன் அழியா அழகில் ஈடுபட்டிருப்பினும், அதற்கு ஒரு வடிவு கொடுத்து வெளியிடு கையில் மனக்கருத்து முழுவதையும் வெளிக்கொணர இயலா தன்றோ? உலகில் காணப்பெறும் பருப்பொருள்களாய கல் வர்ணம், திரைச்சீலை முதலியவற்றிற்கு உள்ள குறைபாடுகளைக் கலைஞன் போக்கிவிட முடியாதா.கவின் அவன் ஆக்கிய கலையும் ஒரளவு குறைபாட்டோடேயே விளங்கும். அறிவின் எல்லைக்கு உட்பட்ட பொருள்களைக்கொண்டே கலை ஆக்கப்படுகிறது. எனவே, அகப் பொருள்களுக்குள்ள குறைவு நிறைவுகள் கலையினிடத்தும் காணப் படும். மற்றப் பொருள்களோடு ஒப்பிட்டால், உண்மை அதிகமாக வெளிப்படும் இயல்பு கலையினிடத்தே காணப்படும் என்பதே கலைஞ னுக்குக் கட்டுப்பாடில்லை - - கலை இத்தனை சிறந்ததாயினும், அது தோன்றும் இடம் மனிதனின் ஆக்கும் சக்தியிலேயே ஆகும். அவ்வாக்கும் சக்தி தானாக அமைந்தால் ஒழிய, கற்றுக்கொடுக்கும் இயல்பினது அன்று. கவிச்சக்ரவர்த்தி பாரதியாரும், ஞான்சம்பந்தரும், நம்மாழ்வாரும் மிக்க இளம் பருவத்திலேயே கவிஞர்களாகத் திகழ்ந்தனர். ஆதலின் கலைஞனுக்கு வயது, அனுபவம் முதலிய கட்டுப்பாடுகள் தேவை இல்லை. மேனாட்டு இசை உலக மன்னனாகிய, "பீத்தோவின் முழுச்செவிடு என்பது இதனை வலியுறுத்துகிறது. கலைஞன் மனத்தில் மறைந்துகிடக்கும் இச்சக்தி பொள்ளெனத் தோன்றுகையிலேயே கலை உண்டர்கிறது. அக் கலையின் வடிவமும் உட்பொருளும் கலைஞன் மனத்தின் ஆழத்திலிருந்தே வெளிப்படுகின்றன. - இங்ங்ணம் மனித மனத்தின் ஆழத்திலிருந்தே கலை தோன்றுகிறது என்றால், ஏன் தோன்றுகிறது என்ன வினா அடுத்து வருமன்றோ? அதற்கு விடை பலர் பலவாறாகத்

ள்ளனர். மனிதன் கலையை ஆக்கித் தீரவேண்டிய

பியமையாமை உண்டா? இல்லை, அவனுடைய பல்வேறு பய. செயல்களில் இதுவும் ஒன்றா? உண்மையை ஆராயுமிடத்து, கலையைத் தோற்றுவிக்கும் இன்றியம்ை யாமை அவனிடம் இயற்கையில் அமைந்து கிடக்கிறது எனக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/356&oldid=751186" இலிருந்து மீள்விக்கப்பட்டது