பக்கம்:இலக்கியக் கலை.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 - இலக்கியக் கலை திற்குக் காரணமாகிறது. ஆனால் இவ்வாசை முற்றும் நிறைவேறு வதற்குப் பல தடைகள் உள்ளன. வெளியுலகச் சட்டதிட்டங் களுக்குக் கட்டுப்பட்டே நாம் எப்பொருளையும் அநுபவிக்க முடியும், எனவே, பொருளும் அ தனை அநுபவிக்க வேண்டும் என்று கருதும் நமது ஆசையும் அவ்வநுபவமும் சுதந்தர முடையவை அல்ல கலையைப் பொறுத்தவரை இவ்வாறு அன்று. பொறிகளின் அநுபவத்திற்குக் கட்டுப்பட்டே கலைகள் இருப்பினும் அவை சுத ந்தரம் உடையவை. ஆசையின் காரணமாக அநுபவிக்கப்படும் ப்ொருள்களும், பொறிகளின் வாயிலாக அநுபவிக்கப்படும் பெர்ருள் களும், உண்மையாகவும், உயிரோடும் இருக்கவேண்டுமென்று விரும்புகிறோம். ஆனால் கலையில் இந்தக் கட்டுப்பாடு இல்லை. காரணம் கலைகள் ஆசை காரணமாக அநுபவிக்கப்படுபவை அல்ல, ஆச்ைம்னம்வரை செல்வதில்லை. ஆனால் கலைகளோவெனில், மனத்தால் அநுபவிக்கப்படுபவை என்று முன்னரேகூறினோம் ஆன்சக்கும் மனத்திற்கும் தொடர்பு ஒன்றும் இல்லை. ஆதலால் மனத்தால் அநுபவிக்கப்படும் இக்கலை உயிரோடு வாழ்வதாக இருத்தல் கூடாது. அங்ஙனம் அது இருப்பின் பொறி அநுபவமட்டில் நின்றுவிடுமே தவிர மனத்திற்குச் செல்லாது. r நுண்கலைகள் இக்கலைகளை அவற்றின் தன்மை நோக்கிக் கலைகள் என்றும் நுேண்கலைகள் என்றும் பிரித்திருக்கின்றன்ர். கட்டிடம், சிற்பம், ஓவியம், இசை, கவிதை என்பன இவ்விரண்டாவது தொகுப்பினுள் அடங்கும். இந்நுண்கலைகளையே இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று, கண்ணாகிய பொறிவழி அநுபவிக்கப்படுவது. ஏன்ய செவியாகிய பொறிவழி அநுபவிக்கப்படுகிறது. இசையும் கவிதையும் இரண்டாவ்து கூறிய முறையில் அநுபவிக்கப்படுபவை. கட்டிடத்திலும் சிற்பத்திலும் கனம் உடைய பருப்பொருள்கள் ப்ய்ன்ப்டுல்தாலும் மூன்று: அளவைகளால் ஆயதாலும் இவை. புற்றவற்ற்ை. நோக்கத் தாழ்ந்தவை. விருப்பம் காரணமாகச். செய்யப்படுபவை எல்லாம் நுண்கலைகள் அன்றாயினும், நுண்கலை ஆளும் விருப்பம், காரணமாகச் செய்யப்படும். இங்ங்ணம் ॐ शब्द iேபடும் செயல்கள் மிகுந்த பயனை அளிப்பதும் உண்டு. ஆனால் அவை எவ்வளவுக்கு எவ்வளவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/359&oldid=751189" இலிருந்து மீள்விக்கப்பட்டது