பக்கம்:இலக்கியக் கலை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் : 3 இலக்கியத் தோற்றம் "இலக்கியம் எவ்வாறு படைக்கப்படுகிறது? ஏன் படைக்கப்படு கிறது? எதற்காகப் படைக்கப்படுகிறது?’ என்பன போன்ற வினாக்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், இந்த வினாக்களைத் தொகைவகைப்படுத்திப் பார்ப்போமானால், ஒரே வொரு வினா நம் முன்னர் முனைப்பாக நிற்கும். இலக்கியம் எதற்காகப் படைக்க்ப்படுகிறது? என்பதே அந்த வினர். வரலாற்றுக்காலம்.நெடுக இலக்கியம் வெவ்வேறாக மாறியும், திரிந்தும், கலந்தும், கரைந்தும் வந்துள்ளது. இலக்கியம் வாழ்க்கையில் மலருவது; வாழ்க்கையால், வளருவது; வாழ்க்கையை மலர்ச்சியுறச் செய்வது; எனவே, இலக்கியத்தின் அடிப்படை வாழ்க்கை என்பது தெளிவாகிறது. -- இலக்கியத் துடிப்புகள் இந்த வாழ்க்கை அனுப்வத்தை, மாட்சியை, குறைகளற்ற புதிய சமுத்ாயத்தைப் படைக்கும் ஆர்வத்தை நிலைக்களனாகக் கொண்டு, இலக்கியம் பன்ட்க்கப்படுகிறது. இவ்வாறு இல்க்கியம் படைக்கப்படுவதற்குரிய உந்துதல் சக்திகளை, "இலக்கியத் gişti. Įsisir’ (‘Literature impulses) srsstrởFL-Gouri. Gamgitt i bpŐL: பன்னேடுங்காலமாக மேல் நாட்டுச் சிந்தனையாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். . . - . . . . . உலகப்பேரறிஞன் சாக்ரடிஸ் காலம் (கி.மு. 5 நூ. ஆ. முதற் கொண்டு இதைப்பற்றிய பல்வேறு வகையான எண்ணப் போக்குகள் இருந்துவருகின்றன. - - * - . . தெய்விக அகத்தூண்டுதல் -Gălii si 5 95ăgirsirG);avirgi (Divine inspiration) இலக்கியம் பன்டக்கப்படுகிறது எனும் நம்பிக்கை பண்டைக் இரேக்கத்திலும் முனைப்பாக இருந்தது. பிளேட்டோவின் :piato) ஐயோன் (ion) எனும் பேருரையாடலில் இந்தக் கருத்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. "ஒளிமயமான வடிவுடன் இறக்கைகளை விரித்துப் பறக்கின்ற ஒரு தெய்வீகப் பொருள் கவிஞனின் உள்ளத்திற்குள் வந்து நுழைகிறது. அப்பொழுது, அவன் தன்னை மறக்கின்றான்; ஒருவகை ஆவேச உணர்ச்சியால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/36&oldid=751190" இலிருந்து மீள்விக்கப்பட்டது