பக்கம்:இலக்கியக் கலை.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 இலக்கியக் கலை என்ற இரண்டிடத்தும் செல்லாது. இசையில் புறப்பகுதியும் அகப்பகுதியும் பிரிக்க முடியாது அமைந்து கிடக்கின்றன. பொருட் சுருக்கமும் பரிமாணமும் கட்டிடக்கலை இப்பகுப்பில் முதற் படியில் அமைந்து கிடக்கும் ஒன்று. முக்கூட்டுப் பரிமாணத்திற்குக் கட்டுப்பட்டு இயற்றப்படுவது இது. மேலும் வசித்தல் முதலிய பயன் கருதிச் செய்ய்ப்படுவதால் பயன்படுத்தப்படும் பொருள்களில் பொருட் சுருக்கம் ஏற்படுகிறது. கலைஞன் இக்கருத்தை அடிப்படையில் நின்னப்பதாலும் சுதந்தரம் இழந்து விடுவதாலும் கலை மட்டின்னதாக ஆகிவிடுகிறது. குறிக்கே ாள் தன்மை

சிற்பமும் இத்தன்மையை உடையதே. ஆனால், ஈண்டும் பொருட் சுருக்கம் என்பதில்லை. பயன் கருதிச் செய்யப்படும் இயல்பும் சண்டில்லை. பெரும்பாலும் சிற்பம் மனித உருவத்தையே கொண்டு செய்யப்படுவதாகலின் மனித மனத்தின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் 'குறிக்கோள் தன்மையை வெளிப்படுத்தப் பயன்படுகிறது. - -

இவற்றினும் வேறுபட்டதாகிய ஓவியக்கலை இரு கூட்டுப் பரிமாணம் உடையது. பயன்படுத்தப்படும் பொருளில் சுருக்கம் இன்மையின் கலைஞனுக்கு அதிகச் சுதந்திரம் இருக்கிறது. ஏனைய இரண்டைக் காட்டிலும் மென்மையும் மேன்மையும் இக்கலையில் திகழ்கின்றன. இக்கலையை அநுபவிக்கப்புகும் முறை முற்கூறிய முறையாகும். வெறும் பொறியளவில் நின்று ஒவியத்தைக் கண்டால் பல்நிறக் கலவை என்று கூறுவதைத் தவிர வேறு ஒன்றும் ஆண்டுக் காண இயலாது. ஆனால் அவ்வோவியம் தாங்கி நிற்கும் உணர்ச்சி நம்மால் பகிர்ந்து கொள்ளப்படும்பொழுது, ஓவியம் தோன்றிய பயனை விளைக் கிறது. ஒவியம் மனிதனின் குறிக்கோள் உண்ர்ச்சியை நன்கு காட்டும் களமாகும். கலைஞ்னும் நம்மைப் போன்ற மனிதன் தானே? எனவே அவன் மனத்தில் தோன்றிய விருப்பு வெறுப்புக்கள், உணர்ாச்சிகள், ஆசைகள் முதலியவற்றை வெளியிட இதனைவிட்ச் சிறந்த சாதனம் வேறில்லை. இசைத்தலையில் குறிக்கோள் பகுதி இன்னும் விரிவடை ३{३६ । । கீத் ப்ய்ன்படுத்தப்ப்டும் பொருள்கள் இருவுடைய பருப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/361&oldid=751192" இலிருந்து மீள்விக்கப்பட்டது