பக்கம்:இலக்கியக் கலை.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துண்கலைகளும் கவிதையும் 341 பொருள்கள் அல்ல. இப்பொருள்கள் உள்ளுணர்வுடையன வாய்க் காலத்தை ஒலியால் நிரப்புகின்றனவேயன்றிப் பருப் பொருள் தொடர்பு ஒன்றும் அங்கு இல்லை. இங்குக் கலைஞன் தன் மனத்தில் தோன்றும் முருகுணர்ச்சியை ஒலிகளால் வெளியிடு கிறான். பொறியளவில் நின்று கண்டாற்கூட அவை வெறும் ஒலிகள் அல்ல. விரும்பத் தருந்த ஒலிகள் ஆகும் அவை. ஏனைய ஒலிகள்போல அல்லாமல் இவை உணர்ச்சியைப் பொதிந்து வெளிவரும் ஒலிகளாகும். இவற்றால் முற்கூறிய கலைகள் போன்றிராமல் இசைக்கலை, கலைஞனுக்குப் பெரிய சுதந்தரத்தை வழங்குதல் காண்க. கலைஞன் செல்லும் வழிதுறைகளை எனைய கலைகளில், ஒருவாறு நாம் ஊகித்துக் கூறிவிடலாம். ஆனால் இசைக் கலையில் மட்டும் பெரும்பாலும் க ைலஞன் மனத்தில் பொள்ளெனத் தோன்றும் உணர்ச்சி அப்படியே வெளிவருகிற த்ாகலின், நாம் ஊகித்து அறிய இயவாது. ஆனால் ஏழு சுரங் களாகிய சட்டங்களுக்கு உட்பட்டுத்தானே கலைஞன் பாடுகிறான்? ஆதலின் நாம் ஏன் ஊகித்தறிய இயலாதெனில் அதற்கு ஒரு காரணம் உண்டு. இசைக்கலையில் புறப்பகுதியும் அகப்பகுதியும் பிரிக்க இயலாதிருப்பதாலும், வெறும் சுரங்கள் ஒலிகளேயாகை யாலும். அவ்ை குழைவு தந்து கற்பனையேர்டு கலந்து பாடப்படும் போதுதான் இன்பம் பயக்கின்றன. ஆகையாலும் இக்கலையில் ஊகம் இயலாமை காண்க. - - z = கவிதையில்தான் கலை முழுவதும் குறிக்கோள் தன்மையை அடைகிறது : இங்குத்தான் முதல்முதலாகப் பொறியுண்ர்வு பயனற்றுப் போய்விடுகிறது. ஆன்ால் கவிதையிலும் இசை உண்டே? அவ்வாறாயின் அவ்விசைப் பகுதியை அனுபவிக்கச் செவியாகிய பொறியின் உதவி தேவைதானே? அங்ஙனம் இருக்கப் பொறியுணர்வு கவிதைக்குத் தேவை இல்ல்ை என்று எவ்வாறு கூறமுடியும்? இவ்வினாக்கள் தோன்றல் இயல்பு. உண்மையை ஆராயுமிடத்து, அவ்விசையும், கவிதையின் கண்லத்தன்மையை நமக்கு உட்செலுத்தும்:ஒரு.சாதனமாக வாகனமாகப் பயன்படுகிறதே தவிர அது கலையன்று. ஏறத்தர்ழக் கலையின் புறப்பகுதியும் அகழ்டிகுதியும் ஒன்றாக ஆகிவிடுகின்றன. புறப்பகுதியாக அன்மந்துள்ள செல்லும், அகப் பகுதியாக அமைந்துள்ள சொல்லின் பொருளும், அப்பொருளால் தோன்றும் அநுபமும் ஒன்றாகவே அமைந் துள்ளன. ச்ொல்லைப் பிடித்து இன்புற்றுப் பிறகு தமக்கு அநுபவம் ஏற்படுவதில்லை. அதற்குப் பதிலாக இரண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/362&oldid=751193" இலிருந்து மீள்விக்கப்பட்டது