பக்கம்:இலக்கியக் கலை.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 இலக்கியக் கலை ஒன்றும் உளதாயினும் "ஆடு களம், "உடைவசதி, நடிப்புத்திறம் முதலிய பலவற்றின் உதவி கொண்டே நாடகஞ் சிறக்கிறது. புதினம் அவ்வாறன்று, அது சிறக்கவேண்டிய அனைத்து உறுப்புக் களும் அதனிடமே உள்ளன. எனவே நாடகத்தைப்பார்க்கிலும் புதினம் சிறப்படையக் காரணம் இருக்கிறது. புதின உறுபபுக்கள் சிறந்த புதினத்திற்கு இன்றியமையாத உறுப்புக்களாக சூழ்ச்சி அல்லது சதி பாத்திரங்கள் "உரையாடல் 'கால்ம் இடம் கடை வெளிப்படையாகவோ குறிப்பாகவோ காட்டப் பெற்றுள்ள வாழ்க்கைத் தத்துவம் என்பனவற்றைக் கூறலாம் இவை அனைத்தும் ஒரே அளவாகவோ அனைத்துமோ இருந்து தீரல்வேண்டும் என்ற இன்றியமையாமை இல்லை. ஒவ்வொன்று மிக்கும் குறைந்தும் இருப்பினும் தவறு இல்லை. பிண்டம் புதினத்தில் "பிண்டம் என்பதே அதன் உட்பொருளாகும். இப்பிண்டம் என்பது எத்தகைய கதை மேற்கொள்ளப் பெறு கிறதோ அதற்கேற்றபடி தோன்றுவதாகும். வாழ்க்கையில் காணப் பெறும் ஆழமான உணர்ச்சிகள், போராட்டங்கள் இவைகளை அடிப்படையாகக் கொண்டு தோன்றும் புதினங்களே மிக்க சிறப் புடையன. தமிழ் மொழியளவில் தோன்றியனவும் தோன்று கின்றனவும் ஆகிய புதினங்கள் பெரும்பாலும் இக் குறைபாடு உடையன. சென்ற பத்து ஆண்டுகளில் நூற்றுக்கணச்கான புதினங் கள் தமிழ்மொழியில் தோன்றியுள்ளன. ஆனால், மிகச் சிலவே நம் நினைவில் அழியாத இடம் பெற்றுள்ளன. வடுவூர் துரைசாமி அவர்கள் எழுதிய எத்தனையோ புதினங்கள் உண்டு. இவை அனைத்தும் ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை ஆனதுபோல வேறு சிறந்த புதினங்கள் தோன்றாமையின் அப்பெயர் தாங்கி நிலவின. ஒன்றாவது பெயருக்குப் பொருத்த முடையத்ன்று. வங்க எழுத்தாளர்களான சரத்சந்திரர், பங்கிம சந்திரர், மராட்டிய எழுத்தாளர் காண்டேகர் போன்றவர்கள் புதினங்கள் மொழிபெயர்ப்பிலுங் கூடத் துடிப்புடன் நிலவுவதற்கும் தமிழர்களால் தமிழ்மொழியில் எழுதப்பெற்ற புதினங்கள் உயிரின்றி உலவுவதற்கும் காரணம் இப்பிண்டம் நன்கு அமைக்கப் படாமையுேயாகும் வாழ்க்கையில் மேலாகக் காணப்பெறும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/367&oldid=751198" இலிருந்து மீள்விக்கப்பட்டது