பக்கம்:இலக்கியக் கலை.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதினம் . 347 உணர்ச்சிகளைக் கொண்டு திட்டப்பெறும் புதினங்கள் நீண்ட நாட்கள் நிலைபெறா. இவ்வாறு கூறுவதால் சாதாரண மக்கள் பற்றிப்புதினங்கள் தோன்றலாகாதுபோலும் என்று நினைந்துவி. வேண்டா. சாதாரணமனிதனின் எளிமையான வாழ்க்கையை அடித்தளமாகக் கொண்டு தோன்றும் புதினமும் சிறந்ததாக இருக்க லாம். பேரரசர்களைப் பற்றியும் ஒரு சமுதாயத்தைப் பற்றியும் எழும் புதினங்கள் சிறப்பற்றும் போகலாம். இவை சிறப்படைவது அவற்றைக் கையாள்வோன் வன்மையைப் பொறுத்ததேயாம். சுருங்கக் கூறுமிடத்து ஒரு புதினம் சிறப்படைவது, கீழ்க்கண்ட பகுதிகள் அதில் அமையும் பொழுதேயாகும். அதன் அடிப்படை ஆழமாகவும், அகலமாகவும் நம்முடைய ஆழ்ந்த எண்ணங்களைத் துாண்டுவதாகவும். மனித சமுதாயத்தின் பொதுக் கருத்தைக் கவரு வதாகவும் இருத்தல் வேண்டும். இவ்வாறு அமையாதன வெல்லாம் புதினங்கள் அல்ல என்று கடுமையான முடிபுகூறத் தேவை இல்லை. ஆனால், அவை சிறந்தவை அல்ல என்று கூறலாம், புதினம் தோன்றுவதன் கருத்து, படிப்போர்க்ரு மகிழ்ச்சி உண்டர்க்குவதே யாகலின் இத்தகைய அடிப்படையில் அமையாமலும், ஒரு நூல் மகிழ்ச்சி தரக்கூடுமாயின் அதுவும் ஏற்றுக்கொள்ளற்பாலதே யாகும். இத்தகைய நூலில் முன்னர்க் கூறிய பல பண்புகளில் யாதானும் ஒன்று மிக்கிருந்து மற்றைய குறைபாடுகளைப் போக்கு மாயின் நன்று. புதினமும் வாழ்க்கையும் புதினம் சிறக்கும் பல பண்புகளில் சிறந்த மற்றொன்று : அது வாழ்க்கையை உள்ளவாறு கூறுவதாய் அமைதல் வேண்டும். புதினம் கட்டுக் கதைதர்னே என்ற எண்ணத்தால் இன்றைய எழுத்தாளர்கள் எதனையும் நுழைக்கத்தக்க இடமாக அதனைக் கருதுகின்றனர். இதைவிடப் பெருந் தவறு ஒன்றுமில்லை, வாழ்க்கையின் எந்தப் பகுதியைப் புதினம் கூற எடுத்துக்கொண்டாலும் அப்பகுதியைப் பற்றிய மெய்ம்மையைக் கூறவேண்டும். அதாவது அப்பகுதியை ஆசிரியன் நன்கு அறிந்து அதில் நன்கு பழகி இருத்தல் வேண்டும். ஆசிரியனுக்குப் பழக்கமும், அநுபவமும் இல்லாத வாழ்க்கைப்பகுதியை எழுதத் தொடங்கினால் விளைவது மயக்கமேயாகும், இங்ங்ணம் அவன் கூறும் பகுதி அவன் நேரடி அநுபவத்தில் பெறுகிறதாயிருப்பின் அவன் கூற்று கற்போர் மனத்தைக் கவரும். இரண்டங்குல உயர அகல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/368&oldid=751199" இலிருந்து மீள்விக்கப்பட்டது