பக்கம்:இலக்கியக் கலை.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 இலக்கியக் கலை முள்ள தந்தத்தில் தன் கைவேலையைக் காட்டும் ஒருவனும் கலைஞன்தான். நூறடி உயரம் உள்ள கோபுரத்தைச் சம்ைப்பவனும் கலைஞன்தான். இரண்டங்குல பரிமாணத்தில் வேலை செய்தமையின் ஒருவனைக் கலைஞன் அல்லன் என்று கூறிவிடமுடியுமா? அதேபோலச் சில ஆசிரியர்கள் தமது குறைவான அதுபவத்தை அடிப்படையாகக் கொண்டு குறைந்த பாத்திரங்களைப் படைத்துக்கொண்டு எழுதுவர். ஆனால், அவற்றில் ஆழம் நிறைந்திருக்குமாகலின் ஒதுக்கி விடுதலாகாது. இதனினும்: மாறுபட்டுத் தமது பரந்த உலகியலறிவின் துணைகொண்டு LᏗ6b) பாத்திரங்களை அமைத்து எழுதுவம் உண்டு. நகரிலேயே பிறந்து வளர்ந்து கிராமக் காட்சியையே கண்டிராத ஒருவர் கிராமத்தை நிலைக்களமாகக்கொண்டு கதை எழுதுவதும், கப்பலில் ஏறி அறியாத ஒருவர் கப்பல் செலவு, இலண்டன் காட்சி முதலியனபற்றிக் கதை கதைப்பதும் இன்று நாம் காண்கின்ற ஒன்றாகும். தன் தன் வாழ்க்கையையும் அநுப வத்தையும் கூர்ந்து நோக்குவதாயின் ஒவ்வொரு மனிதனும் குறைந்த அளவு ஒரு புதினமாவது எழுதித் தீரலாம் என்று மேல்ைநாட்டிலக்கியத் திறனாய்வர் கூறுகிறார்கள் ஆனால், பெரும்பாலோர் இவ்வாறு செய்யாமல் தமக்கு மிகவும் விருப்பமான ஒர் ஆசிரியரைப் பார்த்து நகல் செய்யத் தொடங்கி இறுதியில் தமத்கென ஒன்றும் இல்லாதவர்களா கிறார்கள். எல்லையற்ற கற்பனையின் துணையுடைய ஒரு சிலருக்கு இச்சட்டம் தேவை இல்லை. தாங்கள் காணாத காட்சியைக்கூடப் பிற அறிஞர் எழுதியவற்றைப் படித்த மாத்திரத்தில் தம் கற்பனையின் துணைகொண்டு இவர்கள் தம்முண்ட்ய சொந்த அநுபவமாக்கிக்கொள்கின்றனா. வேதநாயகம் பிள்ளை மாதவையா போன்றவர்கள் இத் தொகுப்பில் சேர்ந்தவர்கள். இத்தகையவர்கள் தாம் கேட்ட அல்லது ஒருமுறைகண்ட ஒன்றை நமக்கு வர்ணிக்கத் தொட்ங்கின்ால், நாம் அதனுடன் அவர்கள் பலகாலம் பழகியவர்கள் போலும் என்று நினைக்க வேண்டியிருக்கும். புதினத்தில் குழ்ச்சி - - சூழ்ச்சி என்பது அடுத்தபடி நோக்கற்குரியது. காதாரணமான ஒரு கதையைக் கூறுவதே ஒருவகை 曼ற்றல் என்று கருதப்படும். வேறு எவ்வகையான ஆற்றலும் இல்லாதவரிடத்தும்கூடக் கதை சொல்லும் ஆற்றல் நிறைந்திருத்தல் உண்டு. சிலருடைய புதினங்களைப் படிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/369&oldid=751200" இலிருந்து மீள்விக்கப்பட்டது