பக்கம்:இலக்கியக் கலை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத் தோற்றம் 21. உந்தப்படுகிறான். இத்தகைய உணர்ச்சிமயமான நிலையில்,..ஒரு வகை வெறியுணர்வோடு இலக்கியப்படைப்பில் அவன் ஈடு படுகிறான். அந்த உணர்ச்சிக்கு ஆட்பட்டு, உந்தப்படுகின்ற வரையில் அவன் பலவகையான படைப்புகளைப் படைக்க இயலுகிறது. அந்த உணர்ச்சி குன்றியவுடன் அவன் செயலற்று, சோர்ந்து விடுகிறான். எனவே. தெய்வீக அகத் தூண்டுதல், பொதுவாகக் கலைப்படைப்புகளுக்கும், சிறப்பாக இலக்கியப் படைப்பிற்கு உந்துதல் சக்தியாக அமைகிறது" என்பது பிள்ேட் டோவின் கருத்து. இந்தக் கருத்து, உலகின் பல்வேறு நாடுகளின் அறிஞர்கள் நம்பிவந்த நம்பிக்கையாகும். இறைவனின் திருவருளா லேயே சிறந்த இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன எனும் எண்ணப் போக்கு அண்மைக்காலம் வரையில் நம் நாட்டிலும் வீறுடன் விளங்கியது. - . கம்பனுக்குக் காளியின் திருவருளால், கவிபாடும் ஆற்றல் உண்டாகியதாகத் தமிழ் நாவலர் சரிதை கூறுகிறது. வடமொழிக் கவிஞரான காளிதாசனுக்குக் காளிதேவி அருளிய பிறகே, மாடு மேய்க்கும் சிறுவ்னாக இருந்த அவன் மாபெரும் கவிஞனாககாளி (யின்) தாசனாக மலர்ச்சியுற்றான் எனும் மரபுவழிச் செய்தியும் இங்கு நினைவு கூரத்தக்கது. சிவபெருமான் வடமொழியைப் பாணினிக்கும் தெ ன் மொழியாகிய தமிழை அகத்தியருக்கும் முதன்முதல் கற்பித்தான் எனும் புராணக்கதைகளும் நாம் அறிந்தவையே. இவை யாவும் எதை உணர்த்துகின்றன? மேற்கண்ட தெய்வீக அகத்துரண்டுதலையே, உருவகக் கதைகள் வாயிலாகத் தெரிவிக் கின்றன. இவற்றைப் போன்றே, நாயன்மார்களும், அருட்கவி களும், இலக்கியப் படைப்பாளர்களாக மாறிய வரலாறுகள் மிகப்பலவாக நம் நாட்டில் வழக்கில் இருந்து வருகின்றன. இத்தகைய எண்ணப்போக்கால் சிறந்த கன்லப்படைப்பு களை- இலக்கியங்களை இறையருள் பெற்றேர்ரே கருவில் திருவுடையராகப் பிறந்தோரே படைக்கக்கூடும் என்பது வெளிப் படுகிறது. இந்த சிந்தனைப் போக்கு மேற்கு நாடுகளிலும் சென்ற நூ. ஆண்டு வரையில் செல்வாக்கு உடையதாக இருந்ததைக் காணுகிறோம். . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/37&oldid=751201" இலிருந்து மீள்விக்கப்பட்டது