பக்கம்:இலக்கியக் கலை.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதினம் 349. கும்பொழுது கதை தங்கு தடையின்றிச் செல்வதைக் காண்கிறோம், ஏனைய அழகுகள் ஒன்றும் அங்கு இல்லா விடினும் கதைப்போக்கு நன்கு அமைந்துவிடுகிறது. ஆனால், பிற அழகுகள் அனைத்தும் நிறைந்துள்ள சில புதினங்களில் கதைப்போக்கு தடைப்பட்டும், வலிந்தும், செல்வதைக் காண்கிறோம். இத்தகையோர் புதினங்களில் இக் குறைபாட்டைப் போக்குவது அதன்கண் உள்ள ஏனைய அழகுகளேயாகும். இருவகையாற்றலும் நிறைந்துள்ள புதினங்களில் காணவேண்டிய பகுதியாகும் சூழ்ச்சி என்பது கூறவந்த கதையைக் கலைத்திறமையுடன் கூறியிருக்கிறாரா என்று பார்த்தல் வேண்டும். அதாவது கதையின் பல பகுதிகளை நன்கு ஆராய்ந்தால் குற்றங் குறைகள் காணப்படுகிறனவா? கதையின் பல பகுதிகளும் தம்முள் நன்கு பொருநதி' உள்ளனவா? என்பதேயாகும்: கதையின் கட்டுக்கோப்பில் இடையில் துண்டு விழாமல் இருத்தல் வேண்டும். முன்னுக்குப் பின் முரண் இல்லாது இருத்தல் வேண்டும். கதையின் பல பகுதிகளும் தம்முள் ஒவ்வோரளவுகொண்டு இறுதியில் ஒரு முழுத்தன்மை பெற்று விளங்கவேண்டும். கதையில் வரும் பல நிகழ்ச்சிகள் திடீரென்று குதிப்பது போல், இல்லாமல் நிகழவேண்டும். ஒரு நிகழ்ச்சியின் முடிவில் மற்றொரு நிகழ்ச்சியின் தோற்ற்ம் கருக்கொண்டிருக்க் வேண்டும். நிகழ்ச்சிக்ளின் போக்கு எவ்வளவு புதுமையுன்ட்ய தாகவும் இயற்கையின் இறந்ததாகிவும் இருப்பினும் அதன் முடிபு நிகழ்ச்சிக்குப் பொருத்தமுடையதா யிருத்தல் வேண்டும். இந்நிகழ்ச்சிகளின் முடிபு இவ்வாறு இருத்தலே. தகுதி என்று கூறும்படியாக அமைதல் வேண்டும். புதின முழுவதிலும் ஊடுருவி நிற்கும் இறுதிநிகழ்ச்சி அவல நிகழ்ச்சியோ அன்றி மகிழ்ச்சியோ தேர்ன்றும்பொழுது இதுதான் நிகழவேண்டியது என்ற எண்ணத்தை உண்டாக்கல் வேண்டும் முன்னர் நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிக்ளின் முடிவும் இதுவாகவேதான் இருக்கும் என்று கூற்த் தக்க, முறையில் இறுதி நிகழ்ச்சி அமைவதே சூழ்ச்சி" நன்கு அமைக்கப்பட்டிருத்தலின் அடையாளம்: இருவகைச் சூழ்ச்சிகள் இச் சூழ்ச்சி ஒரு புதினத்தில் கையாளும் முறையை வைத்துப். புதினங்களையே .ேஇருவகையாகப் பிரிக்கலாம்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/370&oldid=751202" இலிருந்து மீள்விக்கப்பட்டது