பக்கம்:இலக்கியக் கலை.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

854 இலக்கியக் கல்ை அவன் பர்த்திரங்களைப் படைக்க விரும்புகிறானோ அந்தச் சூழ்நிலை பற்றிய முழு அறிவும் அவனுக்கு வேண்டும். அதாவது உலகத்தில் அந்தச் சூழ்நிலை எங்குக் காணப்படுகிறதோ அங்கு அவன் பழகி இருத்தல் வேண்டும் இன்றேல் அவன் பர்த்திரங்கள் நிலத்தில் கிடக்கும் மீன்போல் தவிக்க நேரிடும். சில கலைஞர்களின் பொதுவானதும் பரந்து விரிந்ததுமான உலகியல் அறிவு காரணமாக அவர்கள் சூழ்நிலைப் படைப்பு அவர்கள் பழகர்ததாக இருப்பினும் மெய்ம்மையுடையதாக அமைவதும் உண்டு. - கலைஞனின் விருப்பு வெறுப்பு சிறந்த கலைஞனுக்கும்கூட விருப்பு வெறுப்புக்கள் உண்டு என்பதை மறந்துவிடுதல் ஆகாது ஆகவே அவன் படைக்கும் எல்லாப் பாத்திரங்களும் குறிக்கோள் தன்மை பெற்று இலங்கும் என்று கூறல் இயலாது. சிற்சில பண்பாடுகள் அவனுக்குப் பிடிக்காத தாகவும் அமையலாம். அத்தகைய படைப்புக்களில் அப்பாத்திரங் கட்கு உரிய பொதுத்தன்மை காணப்படுமேயன்றி ஆழ்ந்து காண வேண்டிய பண்புகள் நன்கு அமைவதில்லை. பாத்திரம் சிறந்த புதினம் இதுகாறும் பாத்திரங்கள் பற்றித் தனியாகவும் சூழ்ச்சி பற்றித் தனியாகவும் சில கூறப்பெற்றன. ஆனால் இவை இரண்டும் ஒன்றுபட்டுப் பொருந்தி நடப்பின் அல்லது புதினஞ் சிறக்காது. தமிழ்மொழியளவில் உள்ள புதினங்களை நோக்குமிடத்துச் சூழ்ச்சியை அடிப்படையாகக் கொண்ட புதினங்களே மலிந்துள்ளன. பர்த்திரங்கள் கொண்டு புதினங்கள் அமைக்கப்படும் இயல்பு இன்னும் தமிழ்நாட்டிற்கு நன்கு அமையவில்லை. பேராசிரியர் டாக்டர் மு. வரதராசனார் இத்துறையில் முதல் முயற்சி செய்து, செந்தாமரை என்றதொரு புதினம் அமைத்தார். ஆனால் அவரே மேற்கொண்டு இம்முறையைக் கையாளவில்லை. இதன் காரணத்தைத் தேடி நீண்டது.ாரஞ் செல்ல வேண்டியதில்லை. நாட்டில் இத்தகைய புதினங்கட்கு நிறைந்த வரவேற்பு இல்லை. காரணம் என்ன? இவற்றை அநுபவிக்க நல்ல பயிற்சியும், ஒரு முகப்பட்ட மனநிலையும் வேண்டும். செயற்கை உலகில் சிக்கிச் சிந்தனையை இழந்து தவிக்கும் மக்கட் சமுதாயம் அச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/375&oldid=751207" இலிருந்து மீள்விக்கப்பட்டது