பக்கம்:இலக்கியக் கலை.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதினம் - 357 புதினத்தில் நடைபெறும் ஒவ்வோர் உரையாடலும் நேரடி யாகவோ, மறைமுகமாகவோ கதையை நடத்திச் செல்லுதல், பாத்திரங்களின் பண்பை விளக்கல் என்ற இரண்டில் ஒன்றைச் செய்ய வேண்டும். இவை இரண்டையுஞ் செய்யாத உரையாடல் பயனற்றது. அரசியல் பிரசாரம், சமூக சீர்திருத்தச் சொற்பொழிவு. மூடநம்பிக்கைகளைப் பற்றிய வாதம் முதலியவற்றிற்குப் புதினம் இடமில்லை, சூழ்நிலைக்கேற்ற நடை மேலும் உரையாடல் நல்ல நடையில் அமைதல் வேண்டும். அதாவது பேசுபவன் நிலைக்கு ஏற்ற நடையாக இருத்தல் வேண்டும் வாழ்க்கையில் நாம் நடத்தும் உரையாடலை அப்படியே படிப்பதானால் அது சுவையற்று இருக்கும். ஆனால் அதற்கு மறுதலையாகக் கடினமான சொற்கள் நிறைந்த உரைநடை யானாலும் அதே பயன்தான் விளையும். இவை இரண்டிற்கும் இட்ைப்பட்ட தன்மையில் உரையாடல் அமையவேண்டும். புதின. ஆசிரியன். மிகவும் கவனிக்க வேண்டிய பகுதிகளுள் இதுவும் ஒன்று. பேசுபவன் பண்புக்கு ஏற்ற உரையாடல், அவன் பேசும் சந்தர்ப் பத்திற்கு ஏற்றதாகவும் அமைதல் வேண்டும். எல்லையற்ற உண்ர்ச்சிப் பெருக்கில் இலக்கணமாக ஒருவ்ன் பேச ஆரம்பித்தால் படிப்போர்க்கு அவ்வுணர்ச்சி தோன்றாமல் இருப்பது ஒருபுறமிருக்க அதற்கு மறுதலையான நகைச்சுவை தோன்றுதலுங் கூடும். எனவே ஆசிரியன் உரையாடலை அமைக்கும் பொழுது பேசுபவன், பேசப் படுவன், பேசும்சந்தர்ப்பம் வெளிப்படுத்தப்படும் உணர்ச்சி, நிலைக்களம், சூழ்நிலை முதலியவற்றை மனத்துட்கொண்டுதான் அமைத்தல் வேண்டும். . . . . - . . . . . . . . இவற்றை அடுத்துக் கவனிக்கப்படவேண்டியன சூழ்நிலை, கொள்கை முதலியனவாம். சூழ்நிலை அமைப்பு புதினத்தின் பல்வேறு உறுப்புக்களுள் ”சூழ்நிலை அமைப்பு என்பதும் ஒன்று. அதாவது புதினம் கூறும்;செயல்கள் நடைபெறும் காலமும் இடமும் ஆகும். இப்ப்குதியில்தான் மக்கள் வாழ்க்கை, அவர்கள் பழக்க வழக்கங்கள் முதலியன இட்ம் பெறுகின்றன. இப் பரந்த உலகில் வாழும் மக்கட் கூட்டம் பல்வேறுபட்ட பண்பாடு களுடன் கூடியது. எந்த இடத்தில் கதை நடைபெறுவதாகக் கூறப் படுகிறதோ அதற்கு ஏற்றபடியே இச் சூழ்நிலை அமைக்கப்படல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/378&oldid=751210" இலிருந்து மீள்விக்கப்பட்டது