பக்கம்:இலக்கியக் கலை.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான். மக்களுடைய எண்ணங்கள், உணர்ச்சிகள் முதலியவைதாமே நாடகத்திலும், புதினத்திலும் இடம் பெறுகின்றன? வாழ்க்கையில் காணப் பெறுகிற இவற்றை வைத்துக்கொண்டு ஆசிரியன் புதினம் இயற்றுகிறான். ஆதலின் எங்கேயாவது ஒரிடத்தில் வாழ்க்கையைப் பற்றி அவன் என்ன நினைக்கிறான் என்பதைக் z- கிறித்தானே ஆகவேண்டும்? வாழ்க்கையைப்பற்றிய அவன் கருத்துக்களை வெளியிட அவன் இயற்றும் புதினம் கருவியன்று; என்றாலும் அதிலேயே கிடந்து உழலும் ஒருவனுடைய மனத்தில் மேலே கூறியவைகள் ஒரிரண்டு ஆழமான அநுபவங்களை உண்டாக்காமல் இருப்பதில்லை. அவ்வாறு உண்டாக்கி இருப்பின் மகிழ்ச்சி, துயரம், உணர்ச்சி என்பவற்றைப்பற்றி அல்லது வாழ்க்கையைப்பற்றி அவன் கொண்டுள்ள எண்ணம் வாய்ப்பு வரும்பொழுது வெளிவரத் தானே செய்யும்? . ஆசிரியன் கொள்கை வாழ்க்கைத்தத்துவம் பேசச் சிறந்த இடம் புதினமா என்று கேட்கப்படலாம். இல்லை என்பதே விடை. என்றாலும் உலகில் ஒரு புதினங்கூட, அது புதினம் என்ற் பெயருக்கு உரியதாக இருந்தால், இத் தத்துவம் பேசாமல் இல்லை. காரணம் என்ன? வாழ்க்கையைத்தான் புதினம் பேசுகிறது. வாழ்க்கையில் தோன்றும் அநுபவத்தைத்தான் பேசுகிறது. எனவே, வாழ்க்கையிலும், அநுபவத்திலும் தோன்றும் தத்துவமும் அதில் இடம்பெறுதல் வியப்பன்று அல்லவா? மேலும், சிறந்த எழுத்தாளர் அனைவரும் தீர்ந்த சிந்தனையாளர்கள் அல்லவா? அவர்களுடைய சிந்தனை யாகிய உலையில் உலகில் நடைபெறும் செயல்கள் சென்று வீழ்கின்றன். மேலும் அவர்கள் கூர்ந்து நோக்கும் இயல்பினர். நடைபெறும் செயலின் அடியில் இருக்கும் மனித மனத்தை அவர்கள் ஆய்ந்து இதுதான் உலகியல் என்ற முடிவுக்கு வருகின்றனர். இம்முடிவிலிருந்து வாழ்க்கையைப்பற்றி அவர்கள் கூறும் தத்துவம் செம்மையுடையதாக இருக்கும். என்பதில் ஐயம் ஒன்றும் இல்லை. இத்தகையவர்கள் கண்ட் இத் தத்துங்ங்கள் அவர்களுடைய புதினங்களில் இடம் பெறுதல் இயற்கை. of இயற்றிய புதினங்களில் முந்திரிக் கொட்டைபோல இத்தத்துவம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/382&oldid=751215" இலிருந்து மீள்விக்கப்பட்டது