பக்கம்:இலக்கியக் கலை.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்: 30 நாடக இலக்கியும் முத்தமிழ்-பெயர் தமிழ்மொழி இயல், இசை, நாடகம் என மூவகைப்படும் என்பது யாவரும் அறிந்த ஒன்று. ஆனால், பின்னர் உள்ள இரு தொகுப்புக்களும் இன்றுள்ள நிலையில் ஏட்டளவில் காணும் பிரிவினையேயாகும். இன்றுபோல் என்றும் இது ஏட்டுப் பிரிவினை யாக இருந்திருக்க இயலாது. அவ்வாறாயின் இத்தகைய பெயரும் தோன்றிப் பயின்று இராது. ஏனைய மொழிகளிலும் மூவகைப் பாகுபாடு இருப்பினும் இத்தகைய பெயர்முறை பயிலவில்லை. பின் ஏன் தமிழ்மொழியில் மட்டும் இப்பெயர்கள்? பெருவாரியாகப் பயின்ற காரணத்தாலேயே இந்நிலை ஏற்பட்டிருக்கும். சிலப்பதிகாரம் ஒன்றின் துணைகொண்டே பெரும்பாலும் பழந்தமிழ் நாட்டின் இசை நாடக நிலையை ஆராயமுடிகிறது. ஒரே நூலின் உதவிகொண்டு ஆராய்ந்தால் முழுவதும் ஆராய முடியாது என்பது கூறாமலே விளங்கும். என்றாலும் வேறு வழி யில்லை. - நாடக நூல்களின் அழிவு நீடிப்பும், 'கூத்தும் தமிழ்நாட்டில் மிகப் பழங்காலத்தொட்டு. விள்ங்கிய கலைகளாகும் சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு கல்லார் பரதம், பஞ்சபாரதீயம், பரதசேனாபதியம், சயந்தம், கூத்தநூல், மதிவாணன் நாடகதூல் என்பவற்றோடு இன்னும் பல நூல்களையும் குறிப்பிடுகிறார். அவர் கூறிய வற்றுள்ளும் பெரும்பாலான அவர் காலத்திற்கு முன்னரே அழிந்து ஒழிந்தன. எஞ்சியவை அவர்க்குப் பின்னர் அழிந்தன. ஆக இன்று நாடிகநூல் என்பது ஒன்றுமில்லை. இக்குறைபாட்டைப் பேர்க்க வேண்டி இந்நூற்றாண்டில் வாழ்ந்த சிறந்த தமிழராகிய பரிதிமால் கலைஞன் என்னும் வி. கோ சூரியநாராயண் சாஸ்திரியார் 'நாடகவியல் என்று எழுதியுள்ளார். மேலைநாட்டு மொழிப் பயிற்சியும்,தமிழ்க் கல்வியும் நன்கு நிறைந்த அவர் தொண்டு பெருங் ஒன்றைப் போக்கியது உண்மைதான். என்றாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/385&oldid=751218" இலிருந்து மீள்விக்கப்பட்டது