பக்கம்:இலக்கியக் கலை.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமும் நாடக இலக்கியம் $65 கூத்தும் பயின்று வந்த பழங்கால இலக்கண நூல்கள் பழந்தமிழரின் அக்கலையை விளக்க நன்கு பயன் பட்டிருக்கும். மிகப் பழைய இந் நூல்களின் பெயர்கள் ஓர் அளவு இடர்ப்பாட்டை உண்டாக்குவது உறுதி. கூறப்பெற்ற அனைத்து நூல்களும் வடமொழியில் பெயர் கள் தாங்கியிருப்பது இவை மிகப் பழையனவல்ல என்பதற்கு அறிகுறியாகும், தமிழ்நாட்டு மரபை ஒட்டி நாடகமும், கூத்தும் நடைபெற, அவைபற்றி நூல் எழுதிய தமிழன், அந்நூல்கட்கு வடமொழிப் பெயர்கள் வைப்பது ஒரளவு பொருத்தமில்லாத தர்கவே முடியும். ஆனாலும் அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் நூல்களுள் இரண்டொன்று தவிர ஏனையவற்றின் பெயர்கள் வேற்றுமொழியில்தான் உள்ளன. எனவே ஒன்று உறுதிப்படுகிறது. அதாவது இந்நூல்கள் மிகப் பழையன அல்ல என்பதே. அடியார்க்கு நல்லார் காலத்திற்கு நானூறு அல்லது ஐந்நூறு ஆண்டுகள் முற்பட்டவையாக இருத்தல் வேண்டும். இந்நூல்கள் நாடகத்தைப் பற்றி என்ன கூறின என்பதை அறிய நமக்கு வாய்ப்பில்லை என்றாலும், இவற்றின் பெயரிலிருந்து ஒன்று ஊகிக்க இடமுண்டு. வடமொழி நாடகம், தென்மொழி நாடகம் என்ற இவை இரண்டின் சிறப்பியல்புகளையும் ஏற்றுக்கொண்டு தமிழ் மொழியில் புதுமுறை நாடகங்கள் தோன்றியிருக்கலாம். அவற்றைப்பற்றிய இலக்கணங்களாக முற்கூறிய நூல்கள் அமைந்திருக்கும்போலும். பழைய நாடக அரங்குகள் இவையெல்லாம்இறந்து ஒழியினும் நாடகக்கலையும், நாட்டியக் கலையும் விடாமல் தமிழரால் போற்றப்பட்டன என்பதற்கு இடைக்காலச் சோழார்கள் கல்வெட்டுக்கள் ஆதரவளிக்கின்றன. இடைக்காலச் சோழகள் காலத்தில் நாடக, நாட்டிய அரங்ககுள் மூவகையாக இருந்தன என்றும் தெரிகிறது. அவைபற்றிய விவரங்களைக் காலஞ்சென்ற சரித்திரப் பேராசிரியர் ச.க.கோவிந்த சாமிப்பிள்ளை அவர்கள் 'பழைய தமிழ் நாடகமேடை என்ற ஆங்கிலக் கட்டுரையில் விளக்கியுள்ளார். அவர் கூறுகிறபடி நாடக சாலை மண்டபம் என்பவை திருக்கோயில்களிலும் கோயில் நாடகசாலை என்பவை அரசர்களுடைய அரண்மனைகளிலும், 'அரங்குகள்' என்பவை ஊர்ப்பொதுவிடங்களிலும் இருந்தனவாக அறிகிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/386&oldid=751219" இலிருந்து மீள்விக்கப்பட்டது