பக்கம்:இலக்கியக் கலை.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 - இலக்கியக் கலை சிலப்பதிகாரம் கூறும் அரங்கு இக்காலத்திற்கூடச் சிற்சில ஊர்களில் நாடகசாலைகள் இருக்கக் காண்கிறோம். ஆனால், அவை ஊரின் ஒதுக்குப் புறத்தில் உள்ளன. சிலப்பதிகார காலத்தில் அவ்வாறின்றி ஊரின் நடுவே தேரோடும் வீதியில் ஆடல் அரங்குகள் அமைந்திருந்தன என்று அறிகிறோம். 'ஊரகத் தாகி உளைமான் பூண்ட தேரகத் தோடும் தெருவுமுக நோக்கிக் கோடல்வேண்டும் ஆடரங் கதுவே. என வரும் அரங்கேற்று காதை அடிகள் நாடக அரங்கங்கள் பெற்றிருந்த செல்வாக்கை அறிவுறுத்துகின்றன. இனி அரங்கத்தின் அளவெல்லாம் சொல்லப்படுகிறது அவ்வரிய நூலில். சாதாரண அரங்கங்கள் 35 அடி அகலமும் 40 அடி நீளமும் உடையனவாக இருந்தன. 'நூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும் கோலளவு இருபத்து நால்விர லாக எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து ஒருகோல் உயரத்து உறுப்பின தாகி உத்தரப் பலகையோடு அரங்கின் பலகை வைத்த இடைகிலம் நாற்கோ லாக ஏற்ற வாயில் இரண்டுடன் பொலியத் தோற்றிய அரங்கு........." - (அரங் காதை 99.106.) இதைவிடச் சிறப்பானது ஒன்றுண்டு. உலகம் போற்றும் ஷேக்ஸ்பியர் தம் நாடகங்களைப் படிப்பதற்காக அன்றி நடிப்பதற்காகவே எழுதினார். அவை அனைத்தும் நடிக்கப்பெற்றன. ஆனால் அந் நாடகங்கள் நடிக்கப்பெற்ற அரங்குகளில் "மூடும் திரைகள் இல்லை. இதனாலே.ே அவருடைய "அவல நாடகங்களில் கொலை நடந்த பிறகு தவறாமல் ஒரு பாத்திரம் கொல்லப்பட்டவரைத் தூக்கிக் கொண்டு போனதாக எழுதப்பெற்றுளது. மூடுதிரைகள் இன்மையே இதற்குக் காரணம் எனத் திறனாய்வாளர் கூறு கின்றனர். ஷேக்ஸ்பியர் காலத்தில் மேலை நாடுகளில் இல்லாத இப்புதுமை சிலப்பதிகாரத்தில் இடம் பெறுவது சிறப்பல்லவா? இத்திரைச்சீலையைக் கேரந்துவரல் எழினி’ என அந்நூல் கூறிச் செல்கிறது. அம்மட்டோ? அரங்கின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/387&oldid=751220" இலிருந்து மீள்விக்கப்பட்டது