பக்கம்:இலக்கியக் கலை.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடக இலக்கியம் 869 ஒழிந்தது. எனவே, அதுபற்றிய திறனாய்வு வகுப்பதும் இயலாத காரியம். என்றாலும், பேராசிரியர் சுந்தரம்பிள்ளை, பரிதிமாற் கலைஞன் போன்றவர்கள் தற்காலத்தில் நாடகம் இயற்றி யுள்ளனர். இவை அனைத்தும் மேலைநாட்டு நாடகவியலைப் - பின்பற்றி எழுந்தவையேயாகும். ஆகலின், மேலைநாட்டுத் திறனாய்வாளர் நாடகங்கள் பற்றிக் கூறும் பொதுக்கருத்துக்கள் சில்வற்றை இனிக் காண்போம். இன்றைய நாடகங்கள் பழந்தமிழ் இலக்கிய நாடகங்கள் என்பவை இல்லை யென்றாலும் இன்றையத் தமிழ் இலக்கியங்களில் நாடகங்கள் என்று கூறத்தக்கவை சில உள்ளன. இன்றைய நாடகக் குழுவினர் பலரும் பல நாடகங்களை இயற்றி நடிக்கின்றனர். இவற்றுள் எத்தனைக்ாலப்போக்கில் நிற்கும் என்பது ஆராய்ச்சிக்குரியதே. இலக்கிய வாசனை எத்தனை நாடகங்களில் இருக்கிறது! என்பதும் விரிவாக ஆராயப்பட வேண்டிய வேறு ஒன்று. திருவாளர்; சம்பந்த முதலியார் அவர்களும் பல நாடகங்கள் எழுதியுள்ளார்கள். ஆசிரியர் எஸ் டி. சுந்தரம் கவியின் கனவு ஜீவாதிட்டிய உயிரோவியம். கு.சா. கிருஷ்ணமூர்த்தி எழுதிய 'அந்தமான் கைதி’ என்பன போன்ற பல நாடகங்களும் இன்றுள்ளன. ஆனால், இயல் துன்ற ம் இசைத்துறையிலும் நூல்கள் பல்கி இருப்பது . போல், நாடகத்துறையில் இல்லை என்பது மட்டும் கண்கூடு. விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய இவை போன்றவையே இன்று நாடகங்கள் என்று இருப்பவை. காரணம் என்ன? மக்கள் நாடகங் களை அநுபவிக்கும் பழக்கத்தை மறந்துவிட்டனர். மலிவான "சினிமாக்கலை நாடகக்கலைக்கு.விடைகொடுத்து அனுப்பிவிட்டது. ஆனால், உயர்தர சினிமாப்படங்கள் தோன்றும் மேலைநாடுகளில் கூட நாடகம் உடன் வாழ்ந்துகொண்டுதான் வருகிறது. こ* ヘ மிகக் குறைந்த நல்ல படங்களையும், மிக நிறைந்த மகாமட்டமான படங்களையும் தோற்றுவிக்கும் இந்நாட்டில் இக்கலை, நாடகத்தை х அமிழ்த்தி விட்டது. விந்தையே! நடிப்பின் சிறந்த எல்லையை அடைந்த டி. கே. எஸ். சகோதரர்கள் கூடத் தங்கள் கடையைத் கட்டிவிட்டார்கள் என்றால் நம்மவரின் ரஸிகத் தன்மையை” என்னென்று கூறுவது நாடகத்தமிழ் என்ற ஒரு தனிப்பகுதி வளர்ந்த இந்நாட்டில் ஒரு சிறந்த நாடகக்குழு ஆதரிமம்: இன்மையின் முடப்பட்டது என்பது கேட்கவும் வெட்கப்பட வேண்டிய காரியம். . - منہ: ۔ இ. -24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/390&oldid=751224" இலிருந்து மீள்விக்கப்பட்டது