பக்கம்:இலக்கியக் கலை.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 - இலக்கியக் கல்ை நாடக ஆசிரியன் தொல்லை அது ஒரு புறம் இருக்க. நாடகம் அமைய வேண்டிய முறை பற்றிச் சிறிது ஆராய்வோம், புதின ஆசிரியனுக்கும் நாடக ஆசிரியனுக்கும் பல ஒற்றுமை வேற்றுமைகள் உள்ளன. சூழ்ச்சி என்பது இருவருக்கும் பொதுவான ஒன்றாகும். இதை அமைத்துத் தங்கள் நூல்களை எழுதுவதில் இருவருக்கும் வேற்றுமை உண்டு. புதின ஆசிரியனுக்கு இடம், காலம் இவற்றில் நெருக்கடி இல்லை. ஆனால், நாடகம் அவ்வாறில்லை. ஒரு புதினம் ஒரு தடவையில் உட்கார்ந்து படித்துவிடுவதற்காக எழுதப்படவில்லை. ஆனால் நாடகம் அது போலத் தொடர்ந்து பல சமயங்களில் பார்த்து மகிழ ஏற்பட்டதன்று. ஒரு புதினத்தை விட்டு விட்டுப் பத்துமணி நேரத்தில்கூடப் படித்து மகிழலாம். மூன்று அல்லது நான்குமணி நேரத்தில் காண வேண்டிய ஒன்றாகும் நாடகம். இத்தகைய கால இடநெருக்கடியால் நாடக ஆசிரியன் தனது சுருங்கிய எல்லையை நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டி உளது. அவன் காப்பிய அமைதியில் நாடகம் இயற்ற முடியாது. புதின ஆசிரியன். சொல்லால் விவரிக்க வேண்டிய பகுதிகள் பெரும்பாலான ந்ாடகத்தில் அரங்க வாயிலாக நிரப்பப்படுவது உண்மை நாடகத்தின் கருத்தை முற்றிலும் நாம் வாங்கிக்கொள்வதற்கு அரங்கு ஒரு துணைக்காரணமாகிறது. இருப்பினும் சுருங்கிய கால எல்லையில் நாடக ஆசிரியன் கதைப்போக்கு முழுவதையும் நாம் காணுமாறு செய்யவேண்டி உளது. இதனால் அவன் இன்றியமையாத பகுதிகளை மட்டும் நாடகத்தில் இடம்பெற வைக்கிறான். நவீன நாடகங்களுள் ஒரு சில, செயல்களிலும், ஒரு சில நடிகர்களிலுமே இன்றியமையாத சிறப்புக்கள் அனைத்தும் அமையப்பெற்றுள்ளன. பேராசிரியர் சுந்தரம் பிள்ளையின் மனோன்மணிய நாடகத்திலும், வி. கோ. சூரியநாராயண s ஸ்திரிய்ாரின் மானவிஜயத்திலும் முறையே குடிலனும், பொய்கையாரும் அனைத் து ச் சிறப்பையும் பெறு கின்றனர். அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் நாட்கத்தை நடத்திச் செல்ல உதவுகிறது. இவ்வாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/391&oldid=751225" இலிருந்து மீள்விக்கப்பட்டது