பக்கம்:இலக்கியக் கலை.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 இலக்கியக் கலை முதலாவது, பாத்திரம் பிற பாத்திரங்களுடன் உரையாடும் சந்தர்ப்பம். இரண்டாவது. அப்பர்த்திரம் சில சந்தர்ப்பங்களில் பேசும் தனி மொழி. மூன்றாவது, பிற பாத்திரங்கள் இப் பாத்திரம்பற்றி நேரிலும், மறைவிலும், தம்முள் செய்யும் உரையாடல்கள். இவ்வளவாலும் ஒரு பாத்திரத்தின் பண்பை விளக்க இயலாதவன் ஆசிரியன் அல்லன். அவன் எழுதியது நாடக நூலும் அன்று. இம்முறையில்தான் பாத்திரத்தின் பண்பை விளக்கவேண்டுமே தவிர, இங்கொரு சொல்லும் அங்கொரு சொல்லும் மட்டும் எடுத்துக்கொண்டு அதன் பண்பை ஆய்தல் பெருந் தவறு. அப்படி ஒரு பண்பை மிகுதிப்படுத்திக் காட்ட வேண்டும் என்று ஆசிரியன் நினைந்தால் அவனே அதனைத் தெளிவாகப் பல வழிகளிலும் விளக்கிவிடுவான். தனிமொழி தமிழ்மொழியில் முன்னர் இருந்த நாடகங்களில் தனிமொழி உண்டா என்பது நாம் அறிய முடியாத ஒன்று. ஆனால், இன்றைய நாடகங்கள் அனைத்திலும் இது மிகுதியும் பயன்படுகிறது, எல்லை மீறினால் தனிமொழி அலுப்புத் தட்டும். சிற்சில பாத்திரங்களின் சில பண்பை விளக்க முற்கூறிய வழி அனைத்தும் பயன்படாது. அந்நிலையில் புதின ஆசிரியன் தான் நேர் நின்று. பாத்திரப் பண்பை விளக்குதல்போல் நாடக ஆசிரியன் ச்ெய்ய இயலாதாகலின் இவ்வழியைக் கையாள்கி றான்." • பர்த்திரம் தன்னைத் தானே ஆராயும் ஆராய்ச்சியாக இத்தனிமொழி அமைவதே சிற்ப்பு. இனி அடுத்து நாடக அமைப்பைக் காண்போம் முரண் அமைப்பு நாடகத்தில் சூழ்ச்சியமைப்பின் சிறப்பைக் கண்ட். பிறகு பொதுவான அமைப்புப்பற்றிய கருத்துக்களைக் காண்போம். எல்லா நாடகங்களும் பொதுவாக ஒருவன்க: 'முரண் என்பதனை அடிப்படையிற் கொண்டின. தனிங் பட்டி இரு மனிதர்களுள்ளோ அன்றி இரு கொள்கைகளுள்ளோ முரண் ஏற்பட்லாம்: இருவகை உணர்ச்சிக்ளுள் முரண் ஏற்படுதலும் நாடகம் நடக்க நன்கு துணைபுரியும். ஆனால், . பெரும்பாலான நாக்கங்களுள் இரு தனிப்பட்டமைனிதருள் நிகழும் முரணே காரணமாகிறது. இத்ததைய இநன்மைக்கும் தி ைமக்கும் .இவைய்ே மு. றைே ца“. நாடகத்த்னல்வ்னாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/395&oldid=751229" இலிருந்து மீள்விக்கப்பட்டது