பக்கம்:இலக்கியக் கலை.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடக இலக்கியம் - அவனுக்கு எதிரான 'தீக்குணன் என்பவனாலும் ஏற்றுக் கொள்ளப்பெறுகிறது. இவ்வகை யன்றி நாடகத்தலைவன் தன் விதியை எதிர்த்துப் போரிடுதலும் உண்டு. பழைய கிரேக்க நாடகங்கள் பெரும்பாலும் இம்முறை பற்றியனவே யாகும். இத்தகைய 'முரண்' இல்லாத நாடகங்களும் மேலைநாட்டு இலக்கியங்களில் உண்டு. ஆனால், அவற்றைச் சிறந்த நாடகங்கள் அல்ல என்று அந்நாட்டுத் திறனாய்வாளர் கருதுகின்றனர். நம் நாட்டில் உலவி வரும் நாடகங்கள் பெரும்பாலானவற்றில் இக்குறைபாடு உண்டு. முரண் இல்லாத நாடகங்களே இங்கு மிகுதி. சூரியநாராயண சாஸ்திரியாரின் ‘மான விஜயம் இத்தொகுப்பைச் சேர்ந்தது தான். திருவாளர் சம்பந்த முதலியாரின் நாடகங்கள் பலவற்றில் முரண் இல்லை. இத்தகைய நாடகங்கள் வேறு எத்துறையில் சிறப்பெய்தினும் சிறந்தனவாகா, உச்சநிலை சிறந்த நாடகங்களில் முரண் எங்குத் தொடங்குகிறதோ அங்குத்தான் சூழ்ச்சியும் தொடங்கும. முரண் முடியும் இடத்தில் சூழ்ச்சியும் முடிந்துவிடும், இவ் விரண்டு மையங்களின் இடையே தான் கதையின் சிறந்த பகுதி அமைந்து இருக்கும். போராட் டத்தின் தொடக்கம், நடப்பு. முடிபு என்பன இதனுள் அமைந்துவிடும். எதிர் மாறான கருத்துக்கள் ஒன்றோடொன்று பொரும்பொழுது குழப்பம் ஏற்படுகிறது. இக்குழப்பம் வளர்ந்து கொண்டே சென்று ஒர் 'உச்ச நிலையை அட்ைகிற்து. அந்நிலை யின் பின்ன்ர் முடிபு வெளிப்படத் தொடங்குகிறது. இம் முடிபு நன்மைக்குச் சாதகமாகவோ அன்றித் தீமைக்குச் சாதகமாகவோ இருக்கலாம். உச்சநிலையின் பிறகு நிகழும்நிகழ்ச்சிகள் அனைத்தும், வரப்போகும் முடிபுக்கு (நன்மையாயினும் தீமையாயினும் சரி) இரண் செய்வனவாகவே இருக்கும். ஏறத்தாழ ஒரு படம் போட்டு விளக்கக் கூடிய முறையில் இவை அமையவேண்டும் முதலாவது தொடக்க நிகழ்ச்சி இரண்டாவது குழப்பம்; இப்பகுதியில் இன்ன வகையில்தான் முடிபு நிகழும் என்று கூற இயலாதபடியோராட்டிம் நடைபெறுகிறது. மூன்றாவது உச்சநிலை; இப்பகுதியில் இரண் ஒரு கட்சி வெற்றி அடைவதற்குரிய அறிகுறிகள் காடுேம்; அதாவது மற்றொரு கட்சியைத் தோற்கச் செய்யும் சாதனம் அல்லது வழி ஒன்றை ஒரு கட்சி பெற்றுவிடும் நான்காவது வீழ்ச்சி; இப்பகுதியில் வெற்றி பெறும் கட்சி கருணை இல்லாமல் மற்றக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/396&oldid=751230" இலிருந்து மீள்விக்கப்பட்டது