பக்கம்:இலக்கியக் கலை.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

978 இலக்கியக் கலை நிகழ்ச்சிகள் அமைய வேண்டும். பாத்திரங்களும் சூழ்நிலைகளும் அமைத்துவிட்ட பிறகு, நிகழும் இந்நிகழ்ச்சிகள் இயற்கையாக நடைபெறக் கூடியனவே என்ற எண்ணத்தை உண்டாக்க வேண்டும் ஒரு நிகழ்ச்சியின் பின்வரும் மற்றொன்று முன்னதின் விளைவாக அமைய வேண்டும். வியப்புச் சுவையை தரவேண்டும் என்ற எண்ணத்துடன் ஆசிரியன் சற்று பொருத்தமற்ற நிகழ்ச்சியைப் புகுத்தக் கூடாது. கதைப்போக்கிற்கு உதவும் முக்கியமான நிகழ்ச்சி களைச் சாதாரண நிகழ்ச்சிகளால் மறைத்துவிடக் கூடரிது. தம்மளவில் எவ்வளவு சிறந்தவையாயினும் பொது நிகழ்ச்சிகள் சிறப்பு நிகழ்ச்சிக்கு உதவுவனவாய் இருத்தல் வேண்டுமே தவிர அதனை மறைத்தல் தகர்து. இவையனைத்திலும் சூழ்ச்சி என்ன என்பதை ஆசிரியன் மறந்து விடலாகாது. அரங்கில் நடைபெறும் ஒவ்வோர் உரையாடலும் சூழ்ச்சியின் வளர்ச்சிக்குத் துணையாக அமைதலே சிறப்புடைத்து, புதிய உரையாடல் தொடங்கினாலும் புதிய ஒரு பாத்திரம் அரங்கில் தோன்றினர்லும் அதனால் நாடகம் வளர்ச்சியடைய வேண்டும், - நம் தமிழ்ப்படங்களில் இன்றுங்கூட அர்த்தமும் பொருத்தமுமற்ற நகைச்சுவை என்ற பகுதி மலிந்துள்ளது. இதனுடன் நாட்டியமும் நடைபெறுகிறது. நாடகம் நடை பெற வேண்டுமாயின் இவையும் வேண்டற்ப்ாலன் என்ற எண்ணம் தோன்றி வளருகிறது இந்த நகைச்சுவைதானும் நாடகத்தோடு பொருந்துவதாக உளதா? எவ்விதத் தொடர்புமில்லாமல் உள்ள நகைச்சுவைபை பகுதிகளின் உதவியர்ல்தான் ஒரு நாடகம் நடை பெறுகிறதென்றால் அந்த நாடகம் நடைபெறாமல் இருத்தலே சிறந்தது. குழப்பம் என்று கூறப்பெறும் இப்பகுதியில் பின்விளைவு சித்திரிக்கப் பெறுகின்றதாகலின் அவ்விளைவின் விதை இங்கு அமைக்கப்படல் வேண்டும் முரண்பட்டுள்ள இரு பாத்திரங்களை :யும் இங்குத்தான் அறிமுகம் செய்ய வேண்டும். அவ்வாறின்றிக் கொள்கை முரண் உடைய நாடகமாயினும் நாடகத் தலைவ்ன் உரையாடல் மூலம் கொள்கை முரண் நன்கு விளக்கப்படல் வேண்டும் இந்நிலையின் பின்னர்ப் புதிய பாத்திரங்கள் அரங்கில் தோன்றுதல் அத்துணைச் சிறப்பன்று. இனி, o மன்றாவதாக அமைவது உச்சநிலை என்ற பகுதி யாகும் தமிழ்நாட்டு நாடகங்களையே பு: க்காட்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/399&oldid=751233" இலிருந்து மீள்விக்கப்பட்டது