பக்கம்:இலக்கியக் கலை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 இலக்கியக் கலை கொள்ளவேண்டும் என்னும் துடிப்பே, இலக்கியப் படைப்பிற்கு உந்துதல் சக்தியாக அமைவதைக் காணுகின்றோம். சங்கப் பாடலிலே உள்ளத்தை நெகிழ்விக்கும் ஒரு காட்சியைக் காண்போம். தம்மை ஆதரித்த வள்ளலை நாடி வந்தார் ஒரு புலவர். எதிர்பாரர்வகையில், அந்த வள்ளல் இறந்து கிடப்பதை அப்புலவர் கண்டர்ர்; அதிர்ச்சியுற்றார், சொல்லொணாத் துன்பத்தில் மூழ்கித் தவித்தார். தாமுற்ற அந்தத் துன்பத்தைஅனுபவத்தை வெளிப்படுத்தும் வகையில் 'முல்லையும் பூத்தியோ. ஒல்லையூர்நாட்டே' என வினவும் அவலச்சுவை நிறைந்த பாடலைப் பாடியள்ளார். பாவேந்தர் பாரதிதாசன், "எங்கெங்கு காணினும் சக்தியடா-அவள் ஏழுகடலின் வண்ணமடா!" (பார. பா. தொ 1:1) எனும் பாடலைப்பாடும் நிலையில் தாம் அடைந்த வியப்புமிகு அனுபவத்தை-எங்கும் அன்னை பராசக்தியின் ஆட்சி நிலவுவதைச் சொல்லோவியமாகத் தீட்டியுள்ளார். இதைப் போன்ற சுவை களோடு இயைந்த அனுபவங்களை அவரவர்கள் அனுபவித்தஉணர்ந்தவாறு பலவகைப் பா ட ல் க ைள ப் பாவலர்கள் புனைந்துள்ளனர். இவ்விரு எடுத்துக்காட்டுகளும், தம் வாழ்வில் கவிஞர்கள் பெற்ற அனுபவத்தின் வெளிப்பாடுகளாக அமைந்துள்ளதைப் படிப்போர் எளிதில் உணர இயலும். o புதுமையைப் புலப்படுத்தத் தூண்டும் துடிப்பு தாம்புதியனவாகக் கண்டறிந்த உண்மைகளைப் பிறருக்கு எடுத்துரைக்க வேண்டும். அதன்மூலம் புதிய கருத்துக்களை மக்களிடத்தில் பரப்பவேண்டும் எனும் 'ஆரா இயற்கை அவா! வினால் உந்தப்பட்டு. இலக்கியம் படைக்கப்படுவதுண்டு. இதனை அறிவுநிலை ஆர்வத்துடிப்பு எனவும் கூறுவர். இந்தக் கண் ணோட்டத்தில், கருத்தைத் தெரிவிக்கும் கலையே இல்க்கியம்’ என்பர், சங்ககாலச் சான்றோர் ஒருவர் உலகம் இன்னும் ஏன் அழியாமல் இருக்கிறது?’ எனும் சிக்கலான வினாவிற்கு விடை காண முயன்றுள்ளார். அவருடைய சிந்தனை அலைகள் இடையே அமிழ்தம் போன்று ஒரு கருத்துப் பளிச்சிடுகிறது. தனக்கென, வாழாது பிறருடைய நலத்திற்காக அயராது உழைக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/40&oldid=751235" இலிருந்து மீள்விக்கப்பட்டது