பக்கம்:இலக்கியக் கலை.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடக இலக்கியம் - . శ్రీడ్రీ களையோ பார்க்கும்பொழுது இத்தகைய பிரிவினை பற்றி ஓர் எண்ணமும் நம் ம்னத்தில் தோன்றுவதில்லை. காரணம் உச்சநிலை என்ற ஒன்று அவற்றில் இன்மைதான், உச்சநிலைக் குரிய நிகழ்ச்சியும் இயற்கையில் வருவதாக இருத்தல் வேண்டும். இந்தப் பாத்திரங்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் இவ்வாறு நடந்து கொள்வது முற்றிலும் பொருத்தமே என்ற எண்ணம் பார்ப்பவர், மனத்தில் வரவேண்டும். உச்சநிலை திடீர் நிகழ்க்சியாக இருத்தல் ஆகாது. மேலும் அது ஒரே நிகழ்ச்சியாக இருப்பதே சிறந்தது. இன்றேல் பலமான இரண்டு அல்லது முன்று நிகழ்ச்சிகளின் தொகுப்பாக இருக்கலாம், எவ்வாறாயினும் இது உச்சநிலை’ என்று கண்டார் அறியும் வண்ணம் அது இயைவதே நாடக இலக்கணம், - வீழ்ச்சி அடுத்துள்ள வீழ்ச்சிப் பகுதியில் அதிகக் கடினம் ஒன்றும் இல்லை. இேன்பியல் நாடகத்தை முடிப்பது சுலபம். இங்கு முரண்பட்ட பாத்திரங்கள் அல்லது கொள்கைகள் என்பவற்றுள் ஒன்று கொஞ்சங் கொஞ்சமாகச் சாய்ந்துவிடுகிறது. 'அவல நாடகத்தில் எதிர்ப்புச் சக்தி தன் பலத்தை இழக்கிறது. தீமை வலுவடைகிறது. நன்மை தளரத்தளரத் தீமை வலுவடைந்து இறுதியில் நன்மையைக் கொன்றே விடுகிறது, இப்பகுதியை அமைப்பது எளிதே. ஆனால், இந்த எளிமையிலேயே ஒரு கடுழை யும் அமைந்துவிடுகிறது. இந்நிலையில் ஏறத்தாழ முடிபு தெரிந்து விடுகிறது: ஆகலின் பார்ப்பவர் கவனத்தை இதன் பின் நிகழ்ச்சி களில் இழுத்துப் பிடிப்பது கடினம். நாடக ஆசிரியன் தனது,முழுத் திறமையையும் காட்டினால் ஒழியச் சென்று தேய்ந்து இறுதல் என்னுங் குற்றம் இங்குத் தோன்றிவிடும். இக் குறைபாட்டைப் போக்க ஆங்கில நாடகாசிரியர்கள் உச்ச நிலையை இறுதிக்குத் தள்ளிவிடுகின்றனர். அன்றேல் வீழ்ச்சிப் பகுதியில் திடீர் நிகழ்ச்சி ஒன்றைப் புகுத்திக், கவனத்தை சர்க்க முயல்கின்றனர். தமிழ் நாடகங்களில் ஆதியிலிருந்தே நம் கவனத்தை ஈர்க்க யாரும் முய்ல்வதில்லையாக்லின் இது பற்றித் தனியான அத்துறை கிள்பீடுiரும் இல் சிற்கி:ேதமிழ் நாடகங்களில் இத் திடீர் நிகழ்ச்சிப் புகுத்தப்படுவதைக் காணலாம். ஆனால், இத்தகைய நிகழ்ச்சி அவலச் சுவைன்ய மிகுதிப்படுத்துவத்ர் அமையவேண்டும். இறுதி நேரத்தில் ஒரு நம்பிக்கை உண்டிரக்குவதே இதன் நோக்கம் முடிபு இன்னதுதான் என்று நம்பிக்கொண்டு இருப்பவர்கட்கு இந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/400&oldid=751236" இலிருந்து மீள்விக்கப்பட்டது