பக்கம்:இலக்கியக் கலை.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

886 - இலக்கியக் ல நிகழ்ச்சி ஒரு நம்பிக்கை ஊட்டி ஒரு வேளை முடிபு மாறினும் மாறலாம் என்ற எண்ணத்தைத் தரல்வேண்டும். ஆனால், இறுதியில் இதுவும் தகர்ந்து பழைய முடியே தோன்றுமாறு, அதாவது அவலமே நடைபெறுமாறு செய்தல் வேண்டும். Աք գւ இறுதியாக உள்ள பகுதி முடிபு என்பதாகும். தற்காலத்தில் சிலர் நினைக்கிறபடி நாடகத்திற்கு ஒரு முடியும் வேண்டுவதில்லை என்று கூறிவிடலாமா? வாழ்க்கைதானே நாடகமாக நடிக்கப் பெறுகிறது. ஆகலின் வாழ்க்கைக்கு முடிபு ஒன்றும் இல்லை என்பதே இந் நவீனர்கள் கருத்து. ஆனால் வாழ்க்கையை முழுவதும் எடுத்துப் பார்த்தால் முடிபு இல்லைதான். அதன்கண் ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளை அல்லது செயல்களை எடுத்துக் கொண்டால் முடிபு இருக்கத்தானே செய்கிறது? நாடகமும் சில நிகழ்ச்சிகளைத்தானே சித்திரிக்கிறது? எனவே, நாடகத்திற்கு முடிபு இருந்தே தீரல் வேண்டும். அவல நாடகத்திற்கு முடிபு இன்றியமையாதது. சமுதாய வாழ்க்கையிலும்கூடத் தீமை தப்பிக் கொண்டாலும் இறுதியில் தண்டிக்கப்படுகிறது. என்றேனும் அகப்பட்டுத் தீரும் என்ற எண்ணம் சமுதாய வாழ்க்கையில் அமைவதுபோல நாடகத்தில் இருத்தல் வேண்டும். இதனால் நாடகாசிரியரின் முடிவுப் பகுதியில் ஒழுக்கம்பற்றிய ஒரு விரிவுரை நிகழ்த்தவேண்டும் என்பது கருத்தன்று. ஆனாலும் பார்ப்பவர் மனத்தில் அமைதி நிலவுமாறு செய்வது நாடகாசிரியன் கடமை யாகும். அவல நாடகங்களில் நன்மை அழிக்கப்படினும் மற்றுஞ் சில நன்மைகள் அதன்மூலம் தோன்றுமாறு செய்வது ஒரு முறை. நாடகம் பார்த்தபின் உண்டாகும் அமைதியே இதற்குச் சான்று, ஆழ்ந்த அவலத்திலும்கூட அமைதி கிடைக்குமாறு செய்வதே சிறந்த நாடகம்'அமைக்கும் முறை. - - உபதலைவன் நாடக அமைப்பைப்பற்றி முன்னர்ப் பேசப்பட்டது. அவ் ஆயில் ஒரு பகுதியாகும் உபதலைவன் அமைப்பு, இது Hற்றிக் கூறவந்த அறிஞர் சூரிய நாராயண சாஸ்திரியார் விநாயகன்தான் உதவித் தலைவன்: இல்க்குவன்.உற்ற இலக்கிய மாகும் (நாடகவியல். 93)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/401&oldid=751237" இலிருந்து மீள்விக்கப்பட்டது