பக்கம்:இலக்கியக் கலை.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடக இலக்கியம் såí ! என்று தம து நாடகவியலில் கூறிப்போந்தார். இதனையல்லாத toந்றொரு வகை உபதலைவனையும் அந்நூல் குறிப்பிடுகிறது. அவனைப் பீட்மர்ந்த நாயகன் என்று குறிப்பிட்டு அதுபற்றி, 'இராமற் குற்ற சுக்கி வன்போல் தலைவனிற் சிறிது தாழ்ந்ததன் மையனாய்த் தலைவனைச் சார்ந்த வினைபல வற்றினும் வருவோன் பீட மர்ந்தவன் என்ப" . tநாடகவியல். 93) என்று இலக்கணமும் வரைகிறது நாடகவியல். இவ்விரு வகை களிலும் உபதலைவர்கள் அமைக்கப்பெற்ற நாடகங்கள் தமிழில் உண்டு. ஆனால், நாடகவியல் கூறும் உபதலைவன். மேல்நாட்டுத் திறனாய்வாளர் கண்ட உபதலைவன் அல்லன், அவர்கள் கருத்துப்படி உபதலைவன் இரு காரணங்களால் நாடகத்தில் புகுத்தப்படுகிறான். நாடகத் தலைவன் உபதலைவன் என்ற இருவரும் ஒருவரால் ஒருவர் சிறப்படைகின்றனர். ஒவ்வொரு வருடைய பண்பாட்டை விளக்க மற்றொருவர் அடித்தளமாக அமைகின்றனர். சுருங்கக் கூறின் இரு தலைவர்களும், சேர்ந்தே ஒரு முழுத் தன்மை பெற்ற பண்பாட்டைத் தருவர். பல சமயங் களில் இரண்டு கதைகள் ஒன்றாகப் பின்னப்படும்பொழுது ஒரு கதையின் தலைவன் நாடகத் தலைவனாகவும், மற்றொரு கதையின் தலைவன் உபதலைவனாகவும் அமைதல் உண்டு. இதனினும் சிறந்த ஒருபகுதியாகும் "வேறுபாடு அமைப்பது. வேறுபாடு என்று கூறினவுடன்ேயே முரண் நினைவிற்கு வருகிறது. வேறுபாடு என்றால் கொள்கை, பண்பு முதலிய வற்றான் வேறுபாடு உடைய இருவர் காட்சி அளித்தலே இங்குப் பேசப்பெறுவது. வேறுபாடு அமைப்பது என்பது ஒரு முறையில் நோக்குமிடத்து எளிதானதே. எவ்வகைக் கதையாயினும் இரு வகைப் பண்புகள் காட்சியளிக்கும். அந்த அளவில் வேறுபாடு அமைந்துவிடத்தான் செய்கிறது. நன்மைக்கும் தீமைக்கும் இடையே வேறுபாடு காண்கிேறாம். கருண்ை-கருணையின்மை அல்லது கொடும்ை என்ற இவற்றிடையேயும் வேறுபாடு இருக் கிறது. இவ்வகை வேறுபாட்டை எந்த ஆசிரியனும் கையாள்வது எளிது. துயரத்தில் ஆரம்பித்து மகிழ்ச்சியில் முடிகிற நாடகமும் உண்டு அல்லவா? இத்தகைய நாடகங்களில் வேறுபாடு என்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/402&oldid=751238" இலிருந்து மீள்விக்கப்பட்டது